மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள விமான நிலையத்தில் அந்தரங்க மற்றும் ஆசன வாய் வழியாக தங்கம் கடத்தி சிக்கிக் கொண்ட மூன்று கென்யா பெண்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்திய போதை பொருட்கள் தடுப்பு அதிகாரிகள். இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த சோதனையில் கென்யா நாட்டு பெண்கள் மூன்று பேரை சோதனை செய்யும் போது அவர்களுக்கு கடுமையான வயிற்று வழி ஏற்படுவதாக கூறிவிட்டு, மருத்துவ உதவை கேட்டுள்ளனர்.அந்த மூன்று கென்யா பெண்கள் சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்று நடந்து கொள்கிறார்கள் என்று நினைத்த போதை பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இருந்தாலும் அவர்களை அங்கு இருக்கும் ஜே ஜே மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அந்த மூன்று கென்யா பெண்களுக்கு தீவிரமாக பரிசோதனை செய்ததில் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அயன் படத்தில் வில்லன் போதை பொருட்களை வாய் வலியாக முழுங்கி கடத்தி சொல்வதை பார்த்துள்ளோம் ஆனால் இந்த பெண்கள் அந்தரங்க மற்றும் ஆசன வாயில் பிளாஸ்டிக்கில் தங்கத்தை வைத்து கிடத்தியுள்ளனர். மருத்துவர் உடனடியாக இந்த தகவலை போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கொன்ய பெண்களை பற்றிய உண்மைகள் கூறியுள்ளார்.
இந்த கென்யா பெண்கள் தங்கத்தை அந்தரங்க மற்றும் ஆசன வாய் வழியாக கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்க சொல்லி மருத்துவரிடம் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர். அதான்படி தீவிர சிகிச்சையில் 50லட்சம் மதிப்புள்ள 1கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்கள் சிகிச்சையில் இருந்து வந்ததும் இந்த கடத்தலில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று தீவிரமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மும்பை பரபரப்புக்கு உள்ளாக்கியது.