தென்காசி உள்ளாட்சி தேர்தல்…அதிமுக, பாஜக கூட்டணியை எதிர்கொள்ள முடியாமல் திணறும் திமுக.! கள நிலவரம் என்ன.?

0
Follow on Google News

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளும் 144 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளும் உள்ளன. இங்கே அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது.

9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தென்காசியில் தான் முதல் முதலில் அதிமுக,பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக விரைந்து நடைபெற்று முடிந்தது, பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒரே நாளில் சுமார் தொடர்ந்து 7 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தில் இரு கட்சிகளும் பரஸ்பர விட்டுக்கொடுத்தலின் பேரின், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 2 மாவட்ட கவுன்சிலர் 24 ஒன்றிய கவுன்சிலர் ஒதுக்கப்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக , பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டனர்.

கடந்த ஆறு மதங்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தேர்தலில் 2 அதிமுக, 2 திமுக, 1 காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இதில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 370 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது, அதே போன்று திமுக வெற்றி பெற்ற சங்கரன் கோவில் மற்றும் வாசுதேவ நல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது.
.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், குடும்ப தலைவிக்கு ரூ.1000 மாதம் தோறும் வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும். நகை கடன் தள்ளுபடி செய்யப்படும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். போன்ற வாக்குறுதிகளை அளித்த தற்போது திமுக ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஏமாற்றியதால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர், இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் கடந்த சட்டசபை தேர்தலில் விழுந்த திமுக வாக்குகள் பெரும்பாலும் அதிமுக, மற்றும் பாஜகவுக்கு விழும் என தென்காசி கள நிலவரம் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் திமுகவால் மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்களர்களிடம் கருத்து கேட்டதில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த பெரும்பாலானவர் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதிமுக வாக்குகள் பெரும்பாலும் மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணிக்கே வாக்களிப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.