பரபரப்பாக நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் அடுத்தது யார் ஆட்சி அமைக்க இருப்பது பற்றி வாக்கு பதிவு முடிவுக்கு பின் ஒரு குழப்பமான சூழலாக இருந்து வருகிறது, இரண்டு முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே அடுத்தது நமது ஆட்சி தான் என தெரிவித்து அந்தந்த கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர், மேலும் இரண்டு தரப்பினரும் அவரவரின் உளவு பிரிவின் மூலம் தகவல்களை தெரிந்து கொண்டு அமைதியாக இருந்து வருவது இந்த தேர்தல் கடும் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மற்ற மாநில அரசியலில் அதிரடி காட்டி வந்த பாஜக கடந்த சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளது, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடக, கோவா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எதிர்கட்சி எம்.எல்.ஏ. களை கொத்து கொத்தாக பாஜக பக்கம் தூக்குவது போன்ற அதிரடி அரசியலை தமிழகத்தில் மெல்ல தொடங்கியுள்ளது, அதன் முன்னோட்டமாக திமுக துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்.
அவர் இணைந்த பின் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார், தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார், அடுத்தது திமுக ஆட்சி அமைக்கும் என அதன் கட்சி தலைவர் முக ஸ்டாலின் மேடையில் பேசி வந்தாலும் அந்த கட்சி நிர்வாகிகளுக்கு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை என்பதால் தான் திமுகவில் இருந்து பாஜகவுக்கு அவர்கள் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்பே இரண்டு திமுக எம்.எல்.ஏ கள் பாஜக பக்கம் வந்தது பாஜக டெல்லி தலைமைக்கு கூடுதல் ஊக்கம் கிடைத்துள்ளது, இதனை தொடர்ந்து திமுகவில் இருந்து இரண்டு எம்.எல்.ஏ கள் வருவதற்கு முக்கிய பங்கு வகித்த பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமியை முன்னிறுத்தி ஆபரேஷன் D என பெயரிட்டு திமுகவில் இருந்து கொத்தாக குறைந்தது 7 முதல் அதிகபட்சம் 10 எம்.எல்.ஏ கள் வரை தூக்க அமித்ஷா வியூகம் வகுத்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எப்படி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை காத்திருந்து தனக்கு சீட் கிடைக்காததால்,திமுக எம்.எல்.ஏ ஒருவர் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தாரோ, அதே போன்று தேர்தல் முடிவுக்கு பின் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும் அல்லது இழுபறியில் நீடித்தாலும், திமுக சார்பில் தற்போது வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெரும் தருவாயில் உள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ கள் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்து வி.பி.துரைசாமி உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.