பிரபல ஆய்வு நிறுவனம் தென்மாவட்டத்தில் நடத்திய சர்வே ரிப்போர்ட் வெற்றி பெற்றுவிடுவோம் என தெனாவட்டில் இருந்த வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தபட்ட சர்வே ரிப்போர்ட்டில், பல்வேறு கட்ட தீவிர ஆய்வுக்கு பின் ஒவ்வொரு தொகுதியின் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது, அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில்,அடாவடிக்கு பெயர் பெற்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி போட்டியிடும் மதுரை கிழக்கு தொகுதியின் சர்வே ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தி கடந்த 5 வருடங்களில் அந்த தொகுதியில் உள்ள தனது கட்சி நிர்வாகிகள் வீட்டில் சுப நிகழ்ச்சி, மற்றும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தவிர சொல்லும்படியாக எதுவும் இல்லை என்கிறது சர்வே ரிப்போர்ட், மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்த மூர்த்தி, அந்த தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினால் நாம் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என எதிர்பார்ப்பில் இருந்தார்.
ஆனால் முன்னால் மதுரை எம்பி கோபாலகிருஷ்ணனை வேட்பாளராக களம் இறக்கியது அதிமுக, தனக்கு எதிராக கோபாலகிருஷ்ணன் போட்டியிட கூடாது என சில திரைமறைவு வேலைகளை செய்து வந்த மூர்த்திக்கு, மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக கோபாலகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதன் பின்பு தொகுதியை மாற்றி போட்டியிட முடிவு செய்து மதுரை மேலூர் தொகுதியை கேட்க, ஆனால் காங்கிரஸ் கட்சி மேலூர் தொகுதியை விட்டு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியிலே போட்டியிடுகிறார் மூர்த்தி.
இந்நிலையில் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி வைப்பு யாருக்கு என நடத்தப்பட்ட ஆய்வில், ஏற்கனவே மதுரை எம்பி யாக இருந்த கோபாலகிருஷ்ணன் அந்த தொகுதி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுள்ளார். மேலும் அந்த தொகுதியில் யாதவ சமூக மக்கள் முதன்மை இடத்தில் உள்ளனர், அதன் பின்பு முக்குலத்தோர் சமூகம், பட்டியல் சமூகத்தினர் உள்ளனர், இதர சமூகத்தினர் சொற்ப எண்ணிக்கையில் உள்ளனர், இதில் யாதவ அறக்கட்டளை நிலத்தை மூர்த்தி அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி மூர்த்திக்கு எதிராக யாதவ மக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு கொன்டு சென்றது இந்த விவகாரம், இது குறித்து அந்த சமூக மக்கள் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் வரும் தேர்தலில் மூர்த்திக்கு தக்க பாடம் புகட்டுவோம் என காத்திருந்த யாதவ மக்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் விதத்தில் யாதவ சமூகத்தை சேர்த்த கோபாலகிருஷ்ணனை வேட்பாளராக அதிமுக நிறுத்தியுள்ளது அந்த சமூக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அவர் சார்ந்த கள்ளர் (அம்பலார்) சமூகத்தை சேர்த்தவர்களை கூட தன்னை மீறி அரசியலில் வளரவிடாமல் கட்டம் கட்டி மதுரையில் அரசியல் செய்துவருவர் மூர்த்தி என்பது திமுகவினரே கூறப்படும் குற்றச்சாட்டும் கூட, அரசியல் ரீதியாக திமுகவில் இவரால் ஓரம் கட்டுப்பட்டவர்கள் பெரும்பாலும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம், அவர்கள் தற்போது அதிமுகவில் பயணித்து வருகின்றனர்.
அகமுடியார் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் திமுகவில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணம் மாவட்ட செயலாளர் மூர்த்தி என கூறப்பட்டு வரும் நிலையில், அகமுடையார் சமூகத்தை சேர்ந்த சில சாதி அமைப்புக்கள் மூர்த்திக்கு எதிராக திரும்பியுள்ளது . அடுத்ததாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் திமுக சட்டமன்ற வேட்பாளரை சாதி பெயரை குறிப்பிட்டு இவர் திட்டியது, தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மதுரை முழுவதும் மூர்த்தியை கண்டித்து போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்று பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த பாஜக இளைஞரணி மாநில செயலாளர் சங்கரபாண்டி வீட்டுக்கு சென்று அவரது மனைவியை செருப்பால் அடிக்க பாய்ந்து சிசிடிவியில் சிக்கிய பின் அடாவடிக்கு பெயர் போனவர் மூர்த்தி என அவர் மீது முத்திரை விழுந்தது. மேலும் சங்கரபாண்டியை சாதி பெயரை குறிப்பிட்டு பிள்ளை மகனே உன்னை ஒழித்து காட்டாமல் விடமாட்டே என பேசிய மூர்த்தியை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள பிள்ளைமார் சாதி அமைப்புகள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அடாவடிக்கு பெயர் பெற்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு எதிராக கடும் எதிப்பு இருந்து வருவதால், அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பளார் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வே ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் மக்கள் மத்தியில் தனக்கு ஆதரவாக வரவேற்பு இல்லாததை அறிந்த திமுக வேட்பாளர் மூர்த்தி தனது இறுதி அஸ்திரமான வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்துவிடுவது என முடிவில் இருப்பதாக திமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.