ஆபாச பேச்சுக்கள் மூலம் பிரபலமான சுந்தரவள்ளி ஆபாச பேச்சாளர் என சமூக வலைதளத்தில் அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருகின்றவர். நாகரிகமான அரசியல் விமர்சகர்.மற்றும் அரசியல் தலைவர்கள் யாரும் இவரை பொருட்படுத்துவது கிடையாது. ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் ஏதவாது கருத்து தெரிவித்து வந்தால் தான் தன்னுடைய இருப்பிடம் தெரியும் என்பதால் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் சுந்தரவல்லி.
இந்நிலையில் செபாலி வைத்தியா என்கிற பெண் எழுத்தாளர் ஒருவர் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ் நாட்டில் நான் கவனித்த ஒன்று, இந்து தர்மத்தை வெறுப்பதைத் தவிர வேறெதையும் போதிக்காத தாடி வைத்த மனிதனின் அசிங்கமான சிலைகள், பண்டைய கோவில்களுக்கு வெளியே, சிறிய கிராமங்களில் வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளன. சரி, நான் நம்பிக்கையில் வாழ்கிறேன் என்றும்,
மேலும், திரிபுராவில் லெனின் சிலையால் மண்ணைக் கடிக்க முடிந்தால், இதுவும் ஒரு நாள் நடக்கும்! என அந்த பெண் எழுத்தாளர் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காரைக்குடி காங்கிரஸ் எம்பி காத்திக் சிதம்பரம் இதற்கு பதில் தரும் விதத்தில், தந்தை பெரியார் இல்லாவிட்டால், கோவில்களுக்கு செல்வது உங்கள் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஏகபோகமாக இருந்திருக்கும் என்றும்.
மேலும்,பெரியாரின் பகுத்தறிவு நெறிமுறைகளையும், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் அன்றாட நம்பிக்கை/நடைமுறைகளையும் நல்லிணக்கத்துடன் வாழ்வதை இந்தி இந்துத்துவா படையினால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்திருள்ளார். இந்நிலையில் பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவல்லி பெண் எழுத்தாளரின் கருத்துக்கு பதில் தரும் விதத்தில் தனது சமூக ஊடகத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாவது.
மொத்த காவி அர டவுசர் கும்பலையும் அடிச்சு துரத்தும் போது தெரியும் மேடம்…. இது தமிழ்நாடு… உங்க ஆட்டம் இங்க செல்லாது மேடம்…. காவிக்கே இந்த அதுப்புனா.. செவப்புக்கும், நீலத்துக்கும் கருப்புக்கும் எவ்ளோ அதுப்பு இருக்கும் ….என ஆபாச பேச்சாளர் வழக்கம் போல் தெரு குழாயில் பெண்கள் சண்டையிடுவது போன்று தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளது பலருக்கு முகம் சுழிக்கும் வகையில் அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.