திமுகவை திக்குமுக்காட செய்யும் பாஜக இளைஞரணியின் ஐடி பிரிவு.! குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு.!

0
Follow on Google News

தமிழக பாஜக இளைஞரணி தலைமை, இளைஞரணிக்குள் ஐடி பிரிவு ஒன்றை உருவாக்கி திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகளை திணறடித்து வருகின்றனர், பாஜக மாநில தலைவராக எல்.முருகன் வந்த பின் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர், இதில் இளைஞரணி தலைவராக மீண்டும் இரண்டாவது முறையாக வினோஜ் பி செல்வம் நியமனம் செய்யப்பட்டார், இளைஞரணி தலைவராக மீண்டும் பதவி ஏற்ற வினோஜ் தலைமையிலான பாஜக இளைஞரணியினர் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.

தமிழக முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு மாவட்டம் தோறும் இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து வரும் இளைஞரணி தலைவர் அந்தந்த மாவட்ட இளைஞரணி தலைமை நிர்வாகிகளிடம் ஒவ்வொரு வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்ய முடிவு செய்து அதன் படி இன்று தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியை கொடுக்க தயார் நிலையில் உள்ளது பாஜக இளைஞரணி.

இதனை தொடர்ந்து இன்றைய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சமூக வலைத்தளத்தில் பாஜக இளைஞரணியை வலுப்படுத்தும் நோக்கில், இளைஞரணிக்குள் சமூக ஊடக பிரிவு என உருவாக்கி, தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணியினர் ஒரு பிரிவினர் சமூக ஊடகத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர், இந்த இளைஞரணியின் சமூக ஊடக பிரிவுக்கு தாழமையிடமாக சென்னையில் தனியாக அலுவலகம் திறக்கப்பட்டு இதற்காகவே முழு நேர ஊழியர்களும் பாஜக இளைஞரணியின் சார்பில் அமர்த்தப்பட்டுள்ளது.

மிக குறுகிய காலத்தில் பாஜக இளைஞரணி சார்பில் சமூக ஊடகத்தில் தொடங்கப்பட்டுள்ள முகநூல், மற்றும் டிவீட்டர் பக்கங்கள் அதிக நபர்கள் பின்பற்ற கூடிய பக்கங்களாக வலம் வருகிறது, தொடர்ந்து திமுக மற்றும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை குறி வைத்து உருவாக்கப்படும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் வலைதளவாசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடக்காது.