இறந்தவர்கள், அல்லது சமாதிகளில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வது வழக்கம், ஆனால் கோவில்களில் மாலை வைத்து சுவாமியை வழிபடுவது வழக்கம். சித்தராக வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவிடம் உள்ள பசும்பொன்னில், ஆலயம் போல் வடிவமைக்க பட்டுள்ளது, அங்கே வரும் பக்தர்கள் தேவரை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வருகின்றனர்.
பசும்பொன்னில் உள்ள தேவர் ஆலயத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது, பால் குடம், அழகு குத்துவது என தங்கள் நெற்றிக்கடனை செலுத்தி சித்தர் பசும்பொன் தேவர் அவர்களை கடவுளாக மக்கள் வழிபட்டு வருகின்றனர், இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று நடந்த தேவர் குருபூஜை விழாவுக்காக பசும்பொன் சென்றவர் அங்கே மலர்வளையம் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இது குறித்து பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளதாவது, இந்து மதத்தில் பிறந்து சுத்த பிரம்மச்சாரியாக வாழ்ந்து ஆன்மீக தொண்டாற்றி சித்தர் நிலையில் இயற்கை எய்தபின் ஆகமவிதிபடி 48 நாள் மண்டலபூஜை செய்து வல்லநாட்டு சித்தரால் கோபூஜை, கணபதி ஓமம், 1008 தீபஜோதி வழிபாட்டு சன்மார்க்க முறையில் அடக்கம் செய்யப்பட்ட சித்தர் பசும்பொன் தேவர் அய்யா,
அருட்ஜோதியில் கலந்து தேவர் குருபூஜை 17 ஆண்டுகள் வல்லநாட்டு சுவாமிகளால் வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களால் வல்லநாட்டு சித்தர் விதித்த சன்மார்க்க முறையில் பூஜை நடைபெற்று வருகிறது. பசும்பொன் சித்தர் கோவிலில் மலர்வளையம் வைத்து மிகப்பெரிய அவமரியாதை செய்து விட்டீர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு தேவர் மீது பற்றுதல் இல்லை என்றால் அரசியலுக்காக பசும்பொன் வந்து அவமரியாதை செய்ய வேண்டாம்.
வருடா வருடம் உங்களின் செயலால் தேவரை பூஜிக்கும் அனைவரையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. இனி வரும் காலங்களில் இதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தியுள்ளார் CTR நிர்மல்குமார். கடந்த வருடம் தேவர் குருபூஜையின் போது கலந்து கொண்ட முக ஸ்டாலின் அங்கே கொடுத்த விபூதியை கீழே கொட்டியது பெரும் சர்ச்சையானது குறிப்பிடதக்கது.