மதுரையின் புதல்வி…தமிழகத்தின் பெருமை…ஜொலிக்கும் இந்தியாவின் ஆபரணம் மத்திய நிதியமைச்சருக்கு பேராசிரியர் பிறந்தநாள் வாழ்த்து.!

0
Follow on Google News

நேற்று ஆகஸ்ட் 18ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். தமிழ்நாட்டின் அக்கறையில் அதிக கவனம் செலுத்த கூடியவர் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், வர்த்தக துறையில் அமைச்சர் இருந்த போது அணைத்து தொழில் தொடர்பான விவகாரம் குறித்து தீர்வு காண எளிதில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்,

மேலும் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொண்டு முனைப்புடன் அமைச்சர் தீர்த்து வைத்துள்ளார், குறிப்பாக பட்டாசுக்கு 25 சதவிகிதம் GST வரியை குறைக்க சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்று GST வரியை 18 சதவிகிதமாக குறைந்தவர் அமைச்சர் என கூறிய பேராசிரியர். சிவகாசியில் பட்டாசு தொழில் முற்றிலும் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்ட போது தன்னை நேரடியாக பிரதமரின் முதன்மை செயலரிடம் அழைத்து சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவகாசி பட்டாசு தொழிலார்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவினார்.

மேலும் சாத்தூர், கோவில்பட்டி தீ பெட்டி தொழிற்சாலைகளுக்கு 18 சதவிகிதம் GST வரியில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க வழி செய்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராம் அவர்கள்,நிதி அமைச்சராக பதவி ஏற்ற பின் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் சிறு குறு தொழில் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர். இதே போன்று கொங்கு மண்டலத்தில் உள்ள தென்னை விவசாயிகளில் கொப்பரை தேங்காவுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என தெரிவித்த பேராசிரியர்.

சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 நகரங்களை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வருவதர்க்கு முக்கிய பங்காற்றியவர்.உலக பொருளாதாரத்தை அச்சுறுத்திய கொரோனா தொற்று காலத்தில் இந்திய பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் காப்பாற்றியவர் மாண்புமிகு அமைச்சர் என தெரிவித்த பேராசிரியர்.

மிக எளிமையான தோற்றம், கண்டிப்பான நேர்மை,காரரான நடைமுறை,உதவும் குணம், ஆழமான அறிவு, உலகத்தை பற்றிய புரிதல், கொள்கையில் பிடிப்பு, கட்சி தொண்டர்கள் யார் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை பார்த்தாலும், தங்கள் வீட்டின் மூத்த சகோதரியை போன்ற உணர்வு இவை அனைத்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் சிறப்பு என தெரிவித்த பேராசிரியர் மதுரை மீனாட்சி அருளால் மதுரையின் புதல்வி…தமிழக்தின் பெருமை…ஜொலிக்கும் இந்தியாவின் ஆபரணம் மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தெரிவித்தார் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன்.