உளவுத்துறை கொடுத்த தேர்தல் ரிப்போர்ட்.! செம்ம மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி.!

0
Follow on Google News

வரும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது, பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் இம்முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது, அதே போன்றும் மீண்டும் ஆட்சியை பிடிக்க விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என்றும் மேலும் வெற்றி பெற்றால் வாஷிங் மெஷின் என தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை தன் பக்கம் திருப்பியுள்ளது அதிமுக.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, அடுத்து வர இருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையில் இருந்து வந்தனர், இதனை தொடர்ந்து இன்னும் ஒரு வருடத்தில், கழக ஆட்சி தான், இன்னும் ஆறு மாதத்தில் கழக ஆட்சி தான் என திமுக தலைமை அதன் தொடர்களுக்கு உற்சாகம் கொடுத்து வந்தது.

பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என இருந்த தமிழக அரசியல் களம் மெல்ல மாற்றத்தை நோக்கி செல்ல, கொரோனா ஊரடங்கு காலத்தில், நிவாரணமாக ரூபாய் 1500, பொங்கல் பரிசு ரூபாய் 2500, என அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற, தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில தினங்களுக்கு முன் கூட்டுறவு வங்கியில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று தந்தது.

இந்நிலையில் சமீபத்தில் உளவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தமிழக தேர்தல் நிலவரம் குறித்து கேட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொங்கு மண்டலம், தென் மாவட்டம் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறது, கன்னியாகுமரி நாகர்கோவில், மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அதிமுக கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும், டெல்டா பகுதிகளில் விவசாய கடன் ரத்து, நகை கடன் ரத்து, பொங்கல் பரிசு, கொரோன நிவாரண போன்ற உதவிகளால் அதிமுக கடும் போட்டியை திமுகவுக்கு கொடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 30 தொகுதிகள் வரை கடும் இழுபறியில் உள்ளது, இந்த இழுபறியில் உள்ள தொகுதியில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் போதும் மீண்டும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்துவிடும் என உளவுதுறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் இழுபறியில் உள்ள 30 தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற முடிவில் கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு தகவல் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உளவுதுறை கொடுத்து ரிப்போர்ட்டில் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறபடுகிறது.