கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.! பேராசிரியர் கான்ஸ்டன்டைன் பேட்டி முழு விவரம் உள்ளே….

0
Follow on Google News

முக ஸ்டாலினின் அலட்சியத்தால் கொரோனா தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடுகிறது என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசியார் இராம ஸ்ரீநிவாசன்  சரமாரியாக எழுப்பிய கேள்விகள் குறித்து, திமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் நமது தின சேவல் செய்திக்கு அளித்த பிரத்தியோக பேட்டியில் அவர் கூறியதாவது,

கொரோனா தொற்று 2019 டிசம்பர் மாதத்தில் வர தொடங்கியது, அப்போதே மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திருக்கலாம், இதன் பின்பு 2020ல் கொரோனா தொற்று முதல் அலை வந்து போனது, 2020 நவம்பரில் இந்திய அறிவியலாளர்கள் மீண்டும் கொரோனா தொற்று இரண்டாம் அலை உருவாகும் என எச்சரித்தனர், மேலும் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட ஒரு குழுவும் இதே போன்ற ஒரு தகவலை தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து அதிகாரம் அளிக்கப்பட்ட குழு என பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரு குழு அமைத்தது, அந்த குழுவும் கொரோனா தொற்று இரண்டாம் அலை சுனாமி போன்று கொடூரமாக இருக்கும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது, ஆனால் பிரதமர் மோடி, நாம் கொரோனவை வென்று விட்டோம், எத்தனை சுனாமி வந்தாலும் விரட்டியடிப்போம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்திருந்தனர்.

சட்டசபை தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன், கொரோனா தொற்று காரணமாக பீகாரில் தேர்தல் நடத்த கூடாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர், மேலும் நீதிமன்றமும் தலையிட்டது, ஆனால் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தாமல் இருக்க கூடாது என தெரிவித்தது இதே மத்திய பாஜக அரசு தான்.

மேலும் மே 2ம் தேதிக்கு பின் தமிழகம் மீண்டும் ஒரு ஊரடங்கை சந்திக்காது என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தது குறித்து பேராசிரியர் கான்ஸ்டன்டைன் கூறுகையில், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு அப்போதைய அதிமுக அரசு தக்க நடவடிக்கை எடுத்தால் மே 2ம் தேதிக்கு பின்பு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்துவது தேவையிருக்காது இன்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், ஆனால் வாக்கு பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் வரும் வரை இந்த இடைப்பட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசும் , தமிழக ஆளுநரும் என்ன செய்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் மத்திய பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக ஆளுநரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அடுத்த ஒரு மாதத்தில் அதிமுக எப்படியும் ஆட்சியில் இருக்காது என்று தெரிந்த எடப்பாடி பழனிசாமி அடுத்து அமைய இருக்கும் திமுக ஆட்சியில் அவர்கள் எக்கேடு கேட்டு போனால் நமக்கென்ன என அலட்சியமாக இருந்ததால் தற்போது கொரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை சுட்டி காட்டி அணைத்து கட்சி கூட்டத்தில்  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைத்திருக்கிறார்,  இதே போன்று மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றினால் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என அந்த பத்திரிகை செய்தியை குறிப்பிட்டு,  மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்த்து வருவதாக நமது தினசேவல் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் தெரிவித்தார்.