தனியார் ஊடகத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, கேள்வி எழுப்பிய நெறியாளர் ஆவுடையப்பனை தனது தரமான பதிலடியல் திக்குமுக்காட செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெறியாளர் ஆவுடையப்பன், திமுக அரசு மத்திய அரசிடம் கையேந்திக் கொண்டு இருக்கின்றது என்று நீங்கள் மேடை ஒன்றில் பேசுகையில் சொன்னீர்கள், கையேந்தி என்ற வார்த்தை சரியானதா.? என்ற கேள்விக்கு பதிலளித்த ராதாரவி.
கையேந்துவது என்கின்ற வார்த்தை தமிழ் வார்த்தையா.?அல்லது வேறு ஏதும் வார்த்தையா.? அப்படியிருக்கும்போது கையேந்துவது எப்படி நீங்க தவறான வார்த்தை என்று சொல்லலாம், அதாவது பழமொழி என்ன சொல்கின்றது என்றால், கொடுப்பவனுக்கு தெரியாது கேட்பவன் கடவுள் என்று, கையேந்துபவனுக்கு தெரியாது கொடுப்பது கடவுள் என்று, அப்ப அங்கேயே கையில் ஏந்துதல் என்கின்ற வார்த்தை வருதுல.
அது தான் இறைவனிடம் கையேந்துதல், அதைத்தான் நான் சொல்கின்றேன் என ராதாரவி பேச, அதற்கு பிரதமர் மோடி தான் கடவுளா.? என நெறியாளர் கேள்வி எழுப்ப, ஆமா நமக்கு மத்திய அரசாங்கம் தான் கடவுள் என ராதாரவி பதிலளித்தார், அதற்கு மத்திய அரசாங்கம் எப்படி சார் கடவுளாக முடியும் என மீண்டும் நெறியாளர் குறுக்கு கேள்வி கேட்க அதற்கு ராதாரவி, நீங்க இல்லை என்று சொன்னால், நான் எப்படி பதில் சொல்ல முடியும் சரி இல்லைன்னு சொல்லிட்டு போங்க என்றும்.
மேலும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல தயாராக இல்லை வேற கேள்வி கேளுங்க என ராதாரவி பேச, அதற்கு எனக்கு புரியல சார் என நெறியாளர் கேட்க, உங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள், புரியாமலே இருந்து கொள்ளுங்கள். நீங்க ஒரு அறிவாளி என்று நினைத்து பேசாதீங்க, நாங்கள் மேடையில் பேசும்போது பல விஷயத்தை யோசித்து தான் பேசுகின்றோம் என்றார் ராதாரவி, இதன் பின்பு நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராதாரவி.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என வாக்குறுதி கொடுத்தார்கள் செய்து விட்டார்களா.? என ராதாரவி பேசியபோது. நீங்கள் திமுகவில் இருக்கும் போது நீட் தேர்வுக்கு எதிராக பேசுனீர்கள் என நெறியாளர் கேள்விக்கு பதிலளித்த ராதாரவி. நான் திமுக மேடையில் இருக்கும்போது சொன்னேன். இப்ப சொல்லவில்லை. நான் திமுகவில் இருக்கும் போது பேசியதை தற்போது அது குறித்து கேள்வி கேட்க்கும் நீங்கள்.
ஐயா வைகோ கூடத்தான் தூக்கு மாட்டி தொங்க வேண்டும் என்றால் முதலில் ஸ்டாலினை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று பேசினார், அதை நீங்கள் வைகோவிடம் போய் கேள்வி கேட்க வேண்டி தானே, அதே போன்று திருமாவளவன் திமுக இருக்கும் வரை நாடு அழியும் என்றும், அழிக்க வேண்டுமென்றால் திமுகவை அழிக்க வேண்டும் என்று திருமாவளவன் சொன்னார், அதைப் பற்றி திருமாவளவனிடம் கேட்க வேண்டியதுதானே என ராதாரவி பேசியது கேள்வி எழுப்பிய நெறியாளர் ஆவுடையப்பனுக்கு முக்குடைபட்டது போன்று அமைந்தது குறிப்பிடதக்கது.