தமிழ் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதியவர், தமிழ் சினிமாவில் கவிஞர் வாலி வாழ்ந்த காலத்திலும், நா முத்துக்குமார், பா.விஜய் போன்ற பாலாசிரியர்கள் அதிக ஹிட் கொடுத்திருந்தாலும் பாலாசிரியர்களில் தொடர்ந்து தன்னை முதன்மை பாடலாசிரியராக தன்னை தானே முன்னிலை படுத்தி வந்தவர் படலாசிரியர் வைரமுத்து. இந்நிலையில் பெரும்பாலான சினிமா நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினராக ஜொலித்தார் வைரமுத்து.
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசினார். ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என்கிற கோணத்தில் எழுதப்பட்டிருப்பதாக வைரமுத்து குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது, அன்று தொடங்கி பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார் வைரமுத்து. ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சுக்கு கடுமையாக பதிலடி கொடுத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வைரமுத்துவுக்கு எதிராக கடும் போராட்டம் வெடித்தது.
இந்த சம்பவம் நடந்து அடுத்த ஒரு வருடத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து, அவருடைய பாலியல் லீலைகளையும் அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பின்னணி பாடகி சின்மயி, இதன் பின்பு வைரமுத்துவை பொது நிகழ்ச்சியில் பார்ப்பது அரிதாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மெல்ல வெளியில் தலை காட்ட ஆரம்பித்து தனது கௌரவத்தை மீட்டு எடுக்கும் முயற்சியை மேற்கொண்டார் வைரமுத்து.
அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் ஓஎன்வி விருதை கேரளா அரசாங்கம் வைரமுத்துவுக்கு அறிவித்தது .ஆனால் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் இவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுடன் பல பெண்ணியவாதிகளும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்ததை தொடர்ந்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் ஆங்கிலேயனிடம் இருந்துதான் எங்களுக்கு அறிவு கிடைத்தது வைரமுத்து கூறியதாக பாஜக நிர்வாகி கல்யாணராமன் இந்த தத்திக்கு தெரியாத விஷயம், ஆங்கில இலக்கியத்திற்கு வயது 1000 ஆண்டுகள் கூட முழுமையாக கிடையாது என்பதும், அப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இலக்கியங்களும் அரைவேக்காட்டு இலக்கியங்கள் தான் என்பதும் என கருத்து தெரிவித்திருந்தார் இதற்கு பாஜக மூத்த தலைவர் H.ராஜா, இவர் தத்தி அல்ல அறிந்தே அந்நியரை ஆதரிக்கும் அக்மார்க் ஆங்கிலேய அடிமை கும்பல் என தெரிவித்துள்ளார்.