அரசியலுக்கே கால்ஷீட் கொடுங்கிற ஒரே அரசியல் நடிகை குஷ்பு மட்டுமே.! காங்கிரஸ் முக்கிய தலைவர் தாக்கு.!

0
Follow on Google News

காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, நேற்று முதல் காங்கிரஸ் கட்சியினர் ரூ.2 தந்து எனக்கு எதிராக ட்வீட் போடச் செய்யும் வேலையை தொடங்கிவிட்டனர். ஓரிடத்தில் இருக்கும் வரை அந்த இடத்துக்கு விசுவாசம் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் 5-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் கொள்கை. எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்த்து தான் ஆக வேண்டும்.

பாஜக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ் தான். மேலும் நேற்று தான் கட்சியில் இணைந்து உள்ளேன். உடனே தேர்தலில் நிற்க போகிறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு முன்பே, பாஜகவில் இருக்கிறவர்களுக்கு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். நான் பதவிக்காக பாஜகவுக்கு வரவில்லை. அதுமட்டுமின்றி எனது கணவர் கூறியெல்லாம் நான் பாஜகவில் சேரவில்லை. இப்படி பேசுவதெல்லாம் கேவலமான புத்தி.

பிற கட்சியில் இருந்து விலகி வேறு யாரும் காங்கிரசில் சேரவில்லையா..? திருநாவுக்கரசரே வேறு கட்சியில் இருந்து வந்தவர் தானே. காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது தான், எனக் கூறினார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணி மாநில தலைவர் அஸ்லாம் பாட்ஷா, காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியதாக குஷ்பு பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்.

திமுகவில் இருக்கும் போது அதிமுகவை மனசாட்சி இல்லாமல் பேசினேன், காங்கிரஸில் இருக்கும்போது பாஜக வை மனசாட்சி இல்லாமல் பேசினேன் ..பாஜகவில் இருக்கும்போது காங்கிரஸை மனசாட்சி இல்லாமல் பேசுனேன். காலத்தின் கட்டாயம் மீண்டும் இதே டயலாக்கை பேசுவீர்கள் .அரசியலுக்கே கால்ஷீட் கொடுங்கிற ஒரே அரசியல் நடிகை நீங்கள் மட்டுமே. அரசியல் மேடையாக நினைக்க அரசியல் பேச்சு சினிமா வசனமாக நினைக்கின்ற தங்களது அரசியல் வாழ்க்கை விரைவில் மாயமாகும் என தெரிவித்துள்ளார்.