மருத்துவர் ராமதாஸை சந்தித்து சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..! கடும் எதிர்ப்புகளுக்கு சாதி தான் காரணமா.?

0
Follow on Google News

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் நடிகர் சந்தானம் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. இந்த சம்பவம் நடந்த பின்பு இதுவரை இல்லாத அளவு நடிகர் சந்தானம் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சந்தனம் நடித்த காமெடி கட்சி குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார், அதில் அவர் தெரிவித்ததாவது,

“டிக்கிலோனா” சந்தானம் நடிச்சி வெளி வந்த படம்,படத்தில் ஒரு வசனம் வருது மாற்று திறனாளி ஒருவர் கையில் Stick உடன் நடந்து வர அவரை பார்த்து சந்தானம் “ஏய் Side Stand” என்கிறார் எவ்வளவு மோசமான உருவ கேலி இது! இது மாதிரி பல வசனங்கள்,எனக்கு ரொம்ப நெருடலாக இருந்தது மேல சொன்ன வசனம். சிலருக்கு இது ஒரு படம் தானே,இதுக்கு இவ்வளவு பேசனுமா என நினைக்கலாம்! இது அப்படி சொல்லிட்டு போய்ட முடியாது!

ஒரு மாற்று திறனாளி ஒரு பார்க்ல இருக்க ஊக்காந்து இருக்காரு என வச்சிப்போம்,அவர் பக்கத்துல இருக்க ஒரு 11 வயசு பையன், “ஏய் Side Stand” எடுத்து தள்ளி வை என சொன்னா அந்த மாற்று திறனாளிக்கு எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும்?இப்போ அந்த சிறுவன் தலையில் இந்த மாதிரியான வசனம் தப்பே இல்லை என பதிய வைத்தது எது? நம்ம Daily Routine(or) நாம நினைச்சா செய்யக்கூடியது கூட மாற்று திறனாளிகளுக்கு சவால் தான்!

Example:நாம நினைச்சா கடலில் போய் கால் நனைக்க முடியும். அவங்களுக்கு அது ஒரு கனவு,என்னைக்காது யோசிச்சி இருக்கிங்களா? அவங்க வீல் சேர் எப்படி கடல் மண்ணில் வரும் என? ஆண்டுக்கு ஒரு தடவை சென்னை மாநகராட்சி இதை அவங்களுக்கு செய்து தர,அண்டுக்கு ஒரு தடவை இந்த கடல்ல கால் நனைக்கும் சான்ஸ் தான் கிடைக்குது அவங்களுக்கு! பச்ச குழந்தை கடலை பார்த்த மாதிரி அவங்க முகத்தில் இருக்கும் மகிழச்சியை பாருங்க!

Shopping Mall,Theatre போறோம்,எல்லா இடமும் Restrooms இதெல்லாம் அவங்களுக்கு Friendly ஆக இருக்குதா? இப்படி நமக்கு ஈசியா அமைவதெல்லாம் அவங்களுக்கு ஈசி அமைந்துவிடுவதில்லை! நாம் அவங்களுக்கு செய்ய வேண்டியது,ஆயிரம் இருக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்ற மாதிரி பஸ்கள் மட்டுமே இனி வாங்க வேண்டும் என உத்தரவு போட்டது,இதுவே கண்ணாடி போல உண்மையை காட்டுகிறது!

நாம்(நான் உட்பட)பலரும் நம்மை அறியாமல்,போதுமான Maturity இல்லாமல் பல உருவ கேலிகள் பண்ணி இருப்போம்,அது நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியது! காரணம் எல்லாரும் இதே சமூகத்தில் தான் இருக்கிறோம்,ஆக நிறையவே வாய்ப்பு உண்டு! முதலில் அது தப்பு என உணர வேண்டும் அது தான் அவசியம்! It should start at somepoint. மாற்று திறனாளிகள் உரிமைகள் பற்றி கூட படம் எடுக்க வேண்டாம்,குறைந்தபட்சம் அவர்கள் சுயமரியாதைக்கு இழுக்கு சேர்க்கும்படி வசனம் வேண்டாமே!

இது தனிப்பட்ட ஒருவரின் தப்பு என பார்க்க வேண்டியதில்லை, மொத்தமாக இது போன்ற வசனங்கள் நகைச்சுவை இல்லை என உணர வேண்டிய தருணம் இது என பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உங்க உதயநிதி ஸ்டாலின் , ஒரு பெண்ணை சிக்னலில் பார்த்து வாந்தி எடுப்பது போல் ஒரு காட்சி இருக்குமே அதன் பெயர் உருவ கேலியில் வராதா ? என கேள்வி எழுப்பியுள்ள சினிமா ரசிகர்கள் மருத்துவர் ராமதாஸை சந்தித்த பின்பு சந்தனம் சாதியின் காரணமாக விமர்சனத்துக்கு உள்ளாவதாக சிலர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.