சூர்யா, ஜோதிகா, விஜய், ஆகியயோர் வாய் திறக்காமல் இருக்கட்டும்..! இந்த விவகாரத்தில் OPS மற்றும் EPS ஏன் வாய் திறக்கவில்லை தெரியுமா.?

0
Follow on Google News

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணம் மதம் மாற கட்டாயப்படுத்தியதாக தான் தற்கொலை என்று ஒருபக்கம் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தமிழக பாஜக இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

இதற்கிடையே மாணவி அளித்த இறுதி வாக்குமூலம் வெளியானது அதில், கடந்த 5 வருடமாக ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறேன். ஹாஸ்டல் வார்டன் என்னைமட்டும் கணக்கு வழக்குகளை பார்க்கச் சொல்லுவார். இதனால் விடுமுறைக்கு கூட என்னை வீட்டிற்கு அனுப்ப மாட்டார். வீட்டில் இருந்து யார் கேட்டாலும் ஒழுங்காக படிப்பார் என்று சொல்லிவிடுவார். உடம்பு சரியில்லை என்றால் கூட என்னை விட்டுவிட மாட்டார். இதனால் விரக்தி அடைந்த நாள் கடந்த 9ஆம் தேதியன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன்.

உடம்பு சரியில்லை என்று ஊருக்கு சென்றேன். வாய், நாக்கு தொண்டை எரிச்சல் அதிகமாக இருந்ததால் மருந்து குடித்த விஷயத்தைச் சொன்னேன். ஹாஸ்டல் வார்டன் என்னை தொடர்ந்து கணக்கு வழக்குகளை பார்க்க சொன்னதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று மரண வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார் இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்.

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த , நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ் , தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை காரணம் தற்போது நடப்பது அதிமுக ஆட்சி கிடையாது.

ஆனால் எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அதிமுக. தற்போது ஆளும் திமுக ஆட்சியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த நேரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏன் மாணவி லாவண்யா தற்கொலை மரணம் குறித்து இது வரை வாய் திறக்கவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.