மீராமீதுணையும் விட்டு வைக்காத விஷால்……அம்மா ஓகே சொல்லியும் திருமணம் செய்ய மறுக்க இது தான் காரணமாம்.!

0
Follow on Google News

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகின்றவர், தனியார் தொலைக்காட்சியில் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமானவர், அந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார், இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த மீரா மிதுன் தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர் இயக்குனர் சேரன் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றசாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் தெரிவித்த குற்றசாட்டு உண்மை இல்லை என நிரூபணம் ஆனது. இந்த சர்ச்சை மூலம் பிரபலம் ஆனார் மீரா மிதுன், இதன் பின்பு உச்சத்தில் இருக்கும் நடிகர்களை சீண்டி அவரது ரசிகர்களிடம் சண்டையிட்டு வருவார், இந்நிலையில் சமூக வலைதளத்தில் மீரா மிதுன் பேசிய ஆடியோ ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது, அதில் நடிகர் விஷால் தன்னை திருமணம் செய்துகொள்ள ஆசை பட்டதாகவும், ஆனால் எனக்கு அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை.

எனது அம்மாவுக்கு நான் விஷாலை திருமணம் செய்துகொள்ள ஆசை , விஷால் எனது அம்மாவிடம் நேரடியாகவே என்னை திருமணம் செய்து கொள்ள விருப்புவதாக தெரிவித்தார், அதற்கு எனது அம்மாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், எனக்கு விஷாலை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை, எனக்கு என்னை விட தகுதியில் உயர்ந்தவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை அதனால் விஷாலை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதே வீடியோவில், மீரா மிதுன் போசுகையில் நானும் அவன் மட்டும் தான் தனியாக இருந்தோம் அப்போது நாங்க இருவரும் முத்தம் கொடுத்துக்கொன்டோம் என பேசும்போது, எதிர் தரப்பில் இருக்கும் நபர் முதலில் யார் தொடங்கியது என கேட்கிறார் , அதற்கு இருவரும் தான் என பதிலளிக்கிறார், மேலும் அவன் அந்த விஷயத்தில் கில்லாடி என குறிப்பிட்டும் மீரா மிதுன் மேலும் அவர்களுக்குள் நடந்த சில சில சம்பவங்களை கூறுகிறார்.

இதில் அவன் என்று குறிப்பிடுவது நடிகர் விஷாலை தானா என்கிற குழப்பம் அந்த ஆடியோவை கேட்பவர்களுக்கு குழப்பதை ஏற்படுத்தி வருகிறது, இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில், மீரா மிதுனை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தது உண்மையா.? பொய்யா? என்பது குறித்து இதுவரை விஷால் இந்த ஆடியோ குறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து லட்சுமி மேனன், வரலக்ஷ்மி, ஸ்ரீ ரெட்டி என பல நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கிய விஷால் மீரா மிதுணையும் விட்டு வைக்கவில்லையா என விமர்சனம் எழுந்துள்ளது.