சென்னையில் பட்ட படிப்பு முடித்து துபாயில் வேலை செய்து வந்த விஜயசேதுபதி, பின் வேலை பிடிக்காமல் சென்னை வந்தவர் சினிமா துறையில் நுழைந்தார், தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜயசேதுபதி, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நண்பராக சில காட்சிகளில் ஒரு ஓரமாக இடம் பிடித்திருப்பார், இதே போன்டர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக்காக போராடி வந்த விஜய்சேதுபதி ஒரு கட்டத்தில் சினிமா துறையை விட்டு வெளியேறி மற்றொரு வேலைக்கு தயாரான போது தான் அவருக்கு தென் மேற்கு பருவக்காற்று படத்தில் கதநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதில் கதாநாயகனாக நடித்த விஜய்சேதுபதிக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது.
எந்த ஒரு பத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடித்து வந்த விஜய் சேதுபதி, ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார், சொந்தமாக படம் தயாரித்ததில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய விஜய்சேதுபதி அந்த நட்டத்தை சரி செய்ய அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து, அதில் இருந்து வந்த சம்பள பணத்தை சொந்த தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்தார் விஜய சேதுபதி.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தில் அவரின் வில்லன் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிசி நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹிந்தி, தெலுங்கு படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி அதற்கான அட்வான்ஸ் தொகையும் பெற்று கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது சுமார் 26 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி, அந்த படத்தில் நடிப்பதற்கான அட்வான்ஸ் தொகையை பெற்று கொண்டு, சென்னை வேளச்சேரியில் மிக பிரமாண்ட மால் ஒன்றை கட்டி வருகிறார் விஜய் சேதுபதி என கூறப்படுகிறது. சினிமாவுக்கு பின் எதிர்காலத்தில் வருமானத்துக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க இவ்வாறு விஜய் சேதுபதி முதலீடு செய்வதாக சினிமா வட்டாரதத்தில் பேசப்படுகிறது.