2006-2011 திமுக ஆட்சி காலத்தில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் சுறா, இந்த படம் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நடிகர் விஜய் மற்றும் சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனமான அப்போதைய முதல்வர் கருணாநிதி பேரன் காலா நிதி மாறன் தரப்புக்கு இடையில் பிரச்சனை உருவானது, இதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியாக இருந்த காவலன் படம் திரைக்கு வருவதில் பெரும் சிக்கலை சந்தித்தது.
அப்போதைய எதிர்க்கட்சியை சேர்ந்த ஜெயலலிதா உதவியை விஜய் நாடிய பின்பு காவலன் படம் திரைக்கு வந்தது. இதன் பின்பு நடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் விஜய், இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய ஜெயலலிதா அமோக வெற்றியை பெற்றார், ஆனால் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், ராமாயணத்தில் ராமருக்கு அணில் உதவியது போல, அ தி மு க வெற்றிக்கு நாங்களும் அணில் போல உதவி செய்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
மேலும் தொடர்ந்து எங்களால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது என தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசி வந்தார்.இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருந்த தலைவா படத்தின் போஸ்டருக்கு கீழ் ‘Time To Lead’ என்ற வசனம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சீண்டுவது போன்று அமைத்திருந்ததை தொடர்ந்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. 2013 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று படம் வெளியாக இருந்த நிலையில் படம் வெளியாகவில்லை.
இதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் இதன் பின்னால் இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. குறிப்பாக தலைவா படத்தின் போஸ்டருக்கு கீழ் ‘Time To Lead’ என்ற வசனம் தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில், கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஆகியோர் முடிவு செய்து சென்னையில் இருந்து கொடநாட்டுக்கு சென்றனர்.
ஆனால் அங்கே இவர்களை கொடநாடு பங்களா உள்ளே செல்ல கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எவ்வளவோ முயற்சித்தும், காவலாளிகளிடம் கெஞ்சி கூத்தாடியும் அனுமதியில்லாம் சென்னை திருப்பியுள்ளனர் விஜய் மற்றும் அவரது தந்தை. இதன் பின்பு நடிகர் விஜய் கையை கட்டி அம்மா உதவி செய்யுங்கள் என வீடியோ வெளியிட்ட பின்பு தலைவா படத்தின் போஸ்டருக்கு கீழ் ‘Time To Lead’ என்ற வசனம் நீக்கப்பட்டு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.