கடலூர் மாவட்டம், முத்துநகர் சலங்கை கார ஏரியாவைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி பூங்கொடி, இவர்களுக்கு 28 வயதில் மீனா என்ற மகள் உள்ளார். மீனாவுக்கு நம்பிராஜீடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நம்பி ராஜ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். ஆனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்றவர் என்பதால் மீனாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
நாளடைவில் இவர்களுக்குள் சண்டை முற்றி கொண்டே போனது. தொடர்ந்து நம்பிராஜ் குடித்துவிட்டு மனைவி மீனாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து பொறுமை இழந்த மீனா தனது தாய் பூங்கொடி வீட்டில் தான் வசித்து வருகிறார். மீனா தனது தாய் வீட்டில் இருந்தாலும் குடித்துவிட்டு நம்பிராஜன் அங்கு சென்று ரகளையில் ஈடுபடுவார். இந்த வேலையில் தான் மீனாவின் நடத்தையில் மீது சந்தேகம் அதிகரித்தது.
நம்பிராஜ் மீன்பிடிக்க கடலுக்கு கிளம்பும் வேலையில் தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் பூங்கொடி வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு தனது மனைவியையும் மாமியாரையும் காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்து கடைசியில் கடைக்குச் சென்று வந்து கொண்டிருந்த மீனா மற்றும் அவரது தாய் பூங்கொடியிடமும் மீண்டும் ரகளையில் ஈடுபட்டார்.
இவர்களுக்குள் வாக்குவாதம் அதிகரிக்க ஆத்திரமடைந்த நம்பிராஜன் தனது மனைவி மீனா மற்றும் மாமியாரை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இருவரும் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முதுநகர் போலீசார் சடலங்களை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நம்பிராஜன் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.