காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகி ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி சமூக வலைதள பிரபலம் கிஷோர் கே சுவாமியை கைது செய்யகோரி புகார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலிஸார் கிஷோர் கே சாமி மீது 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) – ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்பட்டுள்ளனர்.
மேலும் இவர் சமுக வலைதளங்களில் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறு பரப்பிப்பியதாக கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டு 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சைதாபேட்டை சிறையில் கிஷோர் கே சாமி அடைக்கப்பட்டார்
இந்நிலையில் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு, நாட்டின் பிரதமர் மற்றும் தேசிய ராணுவத்துக்கு எதிராக பேசிய திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னா மற்றும் சுந்தரவள்ளி மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. தமிழன் பிரசன்னா தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் வழிபாடு, இறைநம்பிக்கைகளை பற்றி இழிவாகப் பேசி வருகின்றவர்.
அனைத்து குடிமகன்கள் தூக்கு கயிற்றுடன் காத்திருக்கின்றனர். வாருங்கள் எங்கள் கண்முன்னே நீங்கள் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்டு களிக்க இருக்கிறோம்’’என தமிழன் பிரசன்னா பிரதமருக்கு எதிராக பகிரங்கமாக வீடியோ வெளியிட்டிருந்தது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்ட்டிருந்தது, அதே போன்று தமிழன் பிரசன்ன மீது பிரதமரை அவமரியாதையாக பேசியதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி, இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்துவிட்டு, அதன் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இந்திய ராணுவ வீரர்களை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார் சுந்தரவள்ளியின் கருத்து நாட்டு மக்களிடையே போராட்டத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா’ கட்சியின் சார்பில் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுந்தரவள்ளி, பேசியபோது அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். உச்சபட்சமாக, “பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தின் மீது ஆளுநர் கை வைத்தபோதே, அவர் கையை வெட்டியிருக்க வேண்டும்!” தமிழக ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருந்தார் இது குறித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சுந்தரவள்ளி அவர் நடத்தி வரும் ‘யுடியூப்’ சேனலில், தேவார பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் பற்றி,அவதுாறான கருத்துக்களை பேசியுள்ளார். தேவார மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர், மாற்று மதங்களை சார்ந்த பெண்களோடு, தவறான பழக்கம் வைக்கலாம் என்று அவர் கூறியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இவர் கூறும் கருத்து தேவாரபதிகத்தில் இல்லை. இந்துக்களுக்கு எதிராக பேசி வரும், சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வந்த தமிழன் பிரசன்னா மற்றும் தமிழக ஆளுநர் கையை வெட்டியிருக்க வேண்டும் என பேசிய சுந்தரவள்ளி ஆகிய இருவரை கைது செய்யாத நிலையில், தற்போது கிஷோர் கே சாமியை கைது செய்துள்ள தமிழக அரசு, தமிழன் பிரசன்னா மற்றும் சுந்தரவள்ளி ஆகிய இருவரையும் எப்போது கைது செய்ய போகிறது என மக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.