கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர்த்து தமிழகத்தில் உள்ள அணைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற காரணமாக இருந்த அப்போதைய திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் தற்போது அதிமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு வகுத்து கொடுக்கும் அணைத்து வியூகங்களை உடைத்தெறிந்து எடப்பாடி பழனிசாமியை செம்ம குஷியில், முக ஸ்டாலினை செம்ம டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் குழுவில் இடம்பெற்றிருந்தவர் சுனில், 2011 தமிழக சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்த திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தது, அதன் பின் நடத்த 2016 தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட சுனில் வகுத்துக்கொடுத்த தேர்தல் வியூகம் 2016 சட்டசபை தேர்தலில் திமுக நுனியளவில் ஆட்சியை இழந்தது.
இதன் பின்பு உத்தரப்பிரதேஷ், குஜராத், ஹிமாச்சல பிரதேஷ், உத்தரகண்ட், மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் நடத்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அங்கே பாஜக ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தார் சுனில், இந்நிலையில் 2018 ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததும், அடுத்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சுனில்.
தமிழகம் முழுவதும் கடுமையான மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என கட்டியமைத்து, தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற அணைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற செய்தவர் சுனில், இதனை தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தலிலும் சுனில் திமுகவுக்கு பணியாற்றுவர் என எதிர்ப்பார்க்க பட்ட நிலையில் முக ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் 2019 நவம்பர் மாதம் திமுகவில் இருந்து விலகினர் சுனில் அதன் பின்பு பிரசாந்த் கிஷோர் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட சுனில், ஏற்கனவே திமுகவில் பணியாற்றிய அனுபவம் உள்ளதால் அவர்களின் பலவீனம் பற்றி முழுமையாக அறிந்தவர் என்பது குறிப்படத்தக்கது, இதனை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு வகுத்து கொடுத்த வியூகங்கள் அனைத்தும் சுனில் முன்பு எடுபடவில்லை, முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு, விவசாய கடன் ரத்து, நகை கடன் ரத்து அனைத்தும், சுனில் வகுத்து கொடுத்த வியூகம் என்றே கூறப்படுகிறது.
அதே போன்று தொலைக்காட்சி விளம்பரம், முதல்வர் பிரச்சார யுக்தி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு என அனைத்திலும் சுனில் ஆலோசனை இருந்தததாக கூறப்படுகிறது, இந்நிலையில் உச்சகட்டமாக இன்று தமிழகத்தில் வெளியாகும் அணைத்து தினசரி பத்திரிகையில் திமுகவுக்கு எதிரான செய்திகள் சுமார் நான்கு பக்கங்கள் வரை இடப்பெற்றிருந்தது மக்கள் மத்தியில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இது திமுகவுக்காக மிக பெரிய எதிர்ப்பு அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதிமுகவுக்கு சாதகமான நிலையை உருவாக்கியதை தொடர்ந்து முக ஸ்டாலின் செம்ம டென்ஷனில் இருந்தாலும், மறுபக்கம் சுனிலை பிரச்சார இடத்துக்கு நேரில் அழைத்து கட்டிப்பிடித்து பாராட்டை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என கூறப்படுகிறது.