வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்துள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வருகிறது, கடந்த சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளும், நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் ஒதுக்கியதால் தான் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்றும், அதே போன்று நாடாளுமன்ற தேர்தலின் போது இன்னும் எத்தனை நாளைக்கு காங்கிரஸ் கட்சியை தலையில் தூக்கி சுமக்க போகிறோம் என திமுக முக்கிய தலைவர் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் மிக கடுமையாக இருக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது, இதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக. கம்யூனிஸ்ட் காட்சிகள் கொடுக்கும் தொகுதிகளை பெற்று கொள்வோம், கூட்டணியில் தொடர்ந்தால் போதும் என்கிற நிலமைக்கு வந்து விட்டது, ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபை தேர்தல் போன்று இம்முறையும் குறைந்தது 40 தொகுதி வரை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறது.
ஆனால் திமுக தலைமை வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சியை தலையில் தூக்கி சுமப்பதை விட, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் இணைக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து புதுச்சேரியில் திமுக முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரக்சனை முன்னிறுத்தி தீவிரமாக தேர்தல் வேலை செய்துவருவது காங்கிரஸ் கட்சியை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என திமுக பிடிவாதமாக இருப்பது டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தகவல் சென்றுள்ளது, இதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டு முறை தமிழகம் வந்த ராகுல் காந்தியை திமுக கண்டு கொள்ளவில்லை, திமுகவின் இந்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து தானாக வெளியேற்றுவதற்காக தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுகவின் நடவடிக்கைகளை உணர்ந்த ராகுல் காந்தி கடந்த முறை தமிழகம் வந்த போது, வரும் சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுவது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலையை தொடங்குகள் என ராகுல் காந்தி கூறியதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து கூட்டணி குறித்து உதயநிதி பேசியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் கமல்ஹாசன் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை, இதனை தொடர்ந்து மீண்டும் திமுக சார்பில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஸ்டாலின் மருமகன் சபரீசன் திமுக கூட்டணியில் இருந்து 25 தொகுதிகள் வரை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார் , ஆனால், கமல்ஹாசன் தரப்பில் இருந்து எந்த ஒரு உறுதியான பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து கமல்ஹாசனை நம்பி காங்கிரஸ் கட்சியை கழட்டி விட நினைத்த திமுகவுக்கு அதிர்ச்சி தரும் தகவல் சென்றுள்ளது.
அதில் காங்கிரஸ் உடன் கமல்ஹாசன் இன்னும் சில கட்சிகள் ஒன்றிணைத்து மூன்றாவது அணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக திமுகவுக்கு தகவல் சென்றுள்ளது, இதனை தொடர்ந்து ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்றுள்ளார் சபரீசன், ஆனால் சபரிபீசனை சந்திக்க ராகுல்காந்தி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் குறைந்தது 35 தொகுதிகள் வரை தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்க வேண்டும் என்றும், மேலும் புதுசேரியில் காங்கிரஸ் கட்சியின் தலமையை திமுக ஏற்று கொண்டால் மட்டுமே கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெரும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்படத்தக்கது.