திமுக முன்னால் மத்திய மந்திரியும், கருணாநிதியின் மகனுமான முக அழகிரி நேற்று மதுரையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கையில் துண்டு சீட்டு இல்லாமல் நீண்ட நேரம் சரளமாக திமுக தலைவர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் பேசியதாவது, எனக்கு தென் மண்டல செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட உடனேயே ஸ்டாலின் பொருளாளர் என செய்திகள் வெளியானது, காரணம் பொறாமை எனக்கு தென் மண்டல செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட பொறாமை.
நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன், திருமங்கலம் இடைத் தேர்தலின் போது ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவி என் வீட்டிற்கு வந்திருந்தனர், அப்போது என் மனைவி முன்னிலையில் நான் ஸ்டாலினிடம் சொன்னேன், ஸ்டாலின் நீ தான் கலைஞருக்கு பிறகு திமுகவின் தலைவர் முதலமைச்சர் என அனைத்தும் உனக்காக நான் பாடுபடுவேன் என சொன்னேன், இது ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும் இதை அவர் மறுக்க முடியுமா.?
ஆனால் அவரு எனக்கு ஏன் துரோகம் செய்தார் என்று எனக்கு தெரியும், அடுத்ததாக நான் மத்திய அமைச்சரானது அவருக்கு பெரும் கடுப்பானது, என்னுடைய அந்தஸ்துக்கு அவர் வரவேண்டும் என நினைத்தால் உடனே நான் அமைச்சராக பதவியேற்ற அடுத்த நாள் கருணாநிதியின் பிறந்த தினத்திற்கு நான் சென்றபோது கலைஞர் என்னை தனியாக அழைத்து உன் தம்பி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி கேட்கிறார் கொடுக்கலாமா என என்னிடம் கேட்டார்,அதற்கு நான் இது உங்கள் கட்சி நீங்கதான் தலைவர் தாராளமாகக் கொடுங்கள் இதை ஏன் என்னிடம் கேட்க வேண்டும் என தெரிவித்தேன்.
எனது ஆதரவாளர்கள் எனது பிறந்த நாளன்று பொதுக்குழுவே வருக.! என போஸ்டர் அடித்தனர், இதில் என்ன தவறு இருக்கிறது.? உடனே போஸ்டர் அடித்து அவர்களை கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர், ஏன் உனக்கு அடிக்கவில்லையா போஸ்டர், வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்தார்கள் ஆனால் வருங்கால முதல்வர் என உன்னால் ஆகவே முடியவில்லையே, வருங்கால முதல்வர் என மொத்தமாக போஸ்டர் அடித்து வைத்துக் கொண்டு நீ வரும்போதெல்லாம் ஓட்டுகிறார்கள், வருங்கால முதல்வர், வருங்கால முதல்வர், என்று ஆனால் உன்னால் இப்ப இல்லை எப்பவும் ஆக முடியாது.
எத்தனையோ நன்மை செய்து இருக்கிறேன் கட்சிக்காக, எத்தனையோ பேரை மந்திரியாக்கி இருக்கிறேன் ஆனால் எவனுக்கும் நன்றி கிடையாது, அசிங்கமாக இருக்கு ஒருத்தர் பேசுகிறார் கலைஞரையே மிஞ்சிட்டப்பா, யாரு ஸ்டாலினை சொல்றாரு எவனாவது ஏத்துக்குவாங்கல, கலைஞருக்கு இருக்கிற அறிவு எவனுக்கு இந்த நாட்டில் இருக்கு, உலகத்துல இருக்கு, கலைஞருடைய பேச்சு, கலைஞருடைய இலக்கியம், கலைஞருடைய கலை, இதெல்லாம் இந்த நாட்டில் எவனிடம் இருக்கிறது.? நாடகத்திலும் சரி, பேச்சுடன் சரி, ராஜதந்திரத்தின் சரி, அவரைப்போல் ஒருத்தன் வருவதற்கு இனிமேல் பிறக்க வேண்டும், ஆனால் பிறக்கவும் முடியாது என முக அழகிரி தெறிக்கவிட்டார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .