அதிமுக முன்னால் அமைச்சர் வளர்மதி பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அதில் அவர் பேசுகையில் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி என மொத்த கருணாநிதி குடும்பத்தையும் ஒருமையில் விளாசி தள்ளினார், அவர் பேசியதாவது, திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறுகிறார், அப்படி 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றால் எதற்காக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார் ஸ்டாலின்.
ஸ்டாலின் தகிடுதத்தம் போட்டால் கூட அவர் ஜாதகப்படி, ராசிப்படி தமிழ்நாட்டின் முதல்வராக முடியாது, ஸ்டாலினாவது முதல்வர் கனவில் பேசுகிறார், ஆனால் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு சோட்டா பையன், அந்த சோட்டா பையன் என்ன பேச்சு பேசுகிறான், முதல்வரை மிக தாழ்த்தி பேசுகிறார், உதயநிதி ஸ்டாலின் வயதுக்கு ஏற்றார் போல் பேச வேண்டும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பற்றி நாங்கள் பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா.? என்றும்,
மேலும் கருணாநிதி மகள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மனைவி அல்லது ஸ்டாலின் சின்னம்மா ராசாத்தி பற்றி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா.? எங்களுக்கு என்ன பேச தெரியாதா.? உங்களைப் பற்றி நிறைய கதை இருக்கிறது. கருணாநிதி பற்றி பேச நிறைய கதை இருக்கிறது, அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன், வனவாசம் புத்தகத்தில் கருணாநிதி பற்றி கண்ணதாசன் சொன்னது, ஒரு தப்பான வீட்டுக்கு சென்று இவன் காசு கொடுக்காமல் வந்துவிட்டான், நான் கொடுத்துவிட்டு வந்தேன் என்று கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.
ஸ்டாலின் அவர்களே உங்கள் தந்தையின் கதை புத்தகத்தில் நாத்தம் அடிக்கிறது, அடுத்து ஸ்டாலின் கதை ஒன்றை சொல்லுகிறேன், சிலோன் லைலா மாடியில் இருந்து தள்ளி விட்டு எக்மோர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார், இது யாரால் நடந்தது தெரியுமா முக ஸ்டாலினால் நடந்தது, இதை நான் சொல்லவில்லை அப்போது பத்திரிகையில் வெளிவந்த செய்தி, அந்த சம்பவம் குறித்து மேலும் ஆழமாக பேசினால் அசிக்கமாக இருக்கும் அதனால் நாகரிகம் கருதி மேலும் நான் பேசவில்லை.
கொரோனா காலத்தில் மட்டும் இல்லை எப்போதும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே இருப்பவர் ஸ்டாலின், தினமும் வித விதமாக தலையில் விக் மாட்டி கொண்டு, மேக்கப் போட்டு இருப்பவர் ஸ்டாலின், அவரை இங்கே அழைத்து வந்து இந்த மேடையில் அமர வைத்து சுற்றி இருக்கும் மின் விசிறியை போட்டுவிட்டால் உட்கார மாட்டார் ஏனென்றால் அவர் தலையில் இருக்கும் விக் பறந்துவிடும் என வளர்மதி பேசினார்.