திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகனுமான முக அழகிரி பாஜகவில் இணைய இருக்கும் செய்தி, திமுக தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது, குறிப்பாக திமுக தலைவர் ஸ்டானின் முதல்வர் கனவில் இடிவிழுந்தது போன்று அமைந்துள்ளது.முக அழகிரி பாஜகவில் இணையும் பட்சத்தில் தென்மாவட்ட திமுக கூண்டோடு காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது, மேலும் மற்ற மாவட்டத்தில் உள்ள அழகிரி தொடர்பில் உள்ள திமுக முக்கிய புள்ளிகள் முக அழகிரியுடன் பாஜகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் உள்ள ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் தனது அண்ணன் முக அழகிரியை தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பது போன்று பேசி பின் தற்போது உள்ள அரசியல் நிலவரத்தை பேச வலியுறுத்தியுள்ளார், அதில் முக அழகிரி பாஜக பக்கம் செல்ல இருக்கும் செய்தி கேட்டு ஸ்டாலின் மிகவும் சோகத்தில் இருப்பதாக தனது அண்ணன் முக அழகிரியிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் முக அழகிரியிடம் பேசிய ஸ்டாலின் குடும்பத்தினரிடம் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த முக அழகிரி, மேலும் ஸ்டாலின் என்னை கட்சியில் இருந்து ஓரம் கட்டிய போது நீங்கள் வேடிக்கை தானே பார்த்தீர்கள் என தனது கோவத்தை வெளிப்படுத்திய முக அழகிரி, மேலும் முரசொலி அறக்கட்டளையில் என் குடும்பத்துக்கு பங்கு கொடுக்காமல் முழுவதும் அவரே அபகரித்து கொண்டது சரியா.? முரசொலி சொத்து ஸ்டாலின் சம்பாரிச்சதா, கலைஞர் சம்பாரிச்சது தானே.? நான் கலைஞர் மகன் தானே எனக்கு பங்கு இல்லையா என முக அழகிரி பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து முக அழகிரி சொன்ன பதில் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கருணாநிதி குடும்பத்தில் முக அழகிரியிடம் நல்ல தொடர்பில் இருப்பவர் கனிமொழி, ஆகையால் கனிமொழி பேசினால் முக அழகிரி மனது மாற வாய்ப்பு இருக்கும் என நினைத்து கனிமொழியை தொடர்பு கொண்டு முக அழகிரியிடம் பேச வலியுறுத்தியுள்ளாராம் ஸ்டாலின், இந்நிலையில் முக அழகிரியை தொடர்பு கொண்ட கனிமொழி. வழக்கம் போல் உடல்நலம் குறித்து விசாரித்து, மற்ற அவர்களின் சொந்த விஷயங்கள் சிலவற்றை பேசிய பின் ஸ்டாலின் விவகாரத்தை கனிமொழி பேச தொடங்கிய போது, வேறு எதாவது இருந்த பேசும்மா, ஸ்டாலினை பற்றி இனி என்னிடம் பேச வேண்டாம் என முக அழகிரி திட்டவட்டமாக கூறிவிட்டாராம்,
இதனை தொடர்ந்து மேலும் ஒவ்வொருவரா ஸ்டாலின் தரப்பில் இருந்து முக அழகிரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு சமரசத்தில் ஈடுபட முயற்சித்த போது, தொலைபேசி அழைப்பை முக அழகிரி எடுக்கவில்லை என கூறப்படுகிறது, ஒரு கட்டத்தில் ஸ்டாலின் தொலைபேசி எண்ணில் இருந்து கூட அழைப்பு வந்துள்ளது, ஆனால் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் தனது தொலைபேசியை முக அழகிரி ஸ்விச் ஆஃ செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.