கோயம்பத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய தலித் சமூகத்தை சேர்ந்த பெண் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் குறிப்பாக தலித் சமூக மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, சமீப காலமாக தலித் சமூக மக்களை திமுக முக்கிய தலைவர்கள் இழிவு படுத்தி வரும் நிலையில் தற்போது உச்சகட்டமாக தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது அந்த சமூக மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்நிதிமன்றத்தில் தலித் சமூகத்தினர் உயர் பதவிக்கு வர காரணம் திமுக போட்ட பிச்சை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது, நங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என திமுக எம்பி தயாநிதிமாறன் பேசியது, இப்படி தொடர்ந்து தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை திமுக முக்கிய தலைவர்கள் இழிவு படுத்தி வரும் நிலையில், தற்போது தலித் சமூகத்தை சேந்த பெண் ஒருவர் மீது திமுகவினர் தாக்குல் நடத்தியுள்ளனர்.
கோவையில் திமுக சார்பில் நடந்த கிராமசபை கூட்டம் அங்கே பழமையான கோவிலிலுக்கு செல்லும் வழியை மறித்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து கோவிலுக்கு சென்ற பெண்கள் சிலர் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர், அதில் திமுகவினரால் தாக்குதலுக்கு ஆளான தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணும் கலந்து கொண்டுள்ளார்,இவர் ஏற்கனவே விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலராக இருந்துள்ளார், தன் சார்ந்த சமூக மக்களுக்கு எதிராக செய்லபடும் திமுகவுடன் விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி வைத்ததால் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில் தலைமை தாங்கிய ஸ்டாலினிடம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால் நகை கடன் ரத்து செய்யப்படும், கல்வி கடன் ரத்து செய்யப்படும், என வாக்குறுதி கொடுத்தீர்கள் என்னாச்சு உங்கள் வாக்குறுதி, எதற்காக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றிர்கள், இன்னும் எத்தனை காலம் இப்படி மக்களை ஏமாற்ற போகிறீர்கள் என தலித் சமூகத்தை சேர்ந்த அந்த பெண் கேள்வி எழுப்ப பதில் கூற முடியாமல் திணறியுள்ளார் ஸ்டாலின்.
மேலும் கேள்வி எழுப்பிய தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு பதில் அளிக்காமல், அங்கே இருந்த திமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் தாக்குதலில் இடுப்பப்பட்ட வீடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள தலித் சமூக மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்களை தலித் சமூக மக்களின் காவலன் என மார் தட்டி கொள்ளும் திருமாவளவன், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் அமைதியாக இருப்பது இவர்கள் தலித் சமூக மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா அல்லது திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என பொது மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .