இலங்கை மீன்பிடி படகில் போதை பொருள் கடுத்துவதாக உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இலங்கை மீன்பிடி படகான டியு ஷஷிலாவை இந்திய கடற்படை சென்ற வாரம் நடுக்கடலில் இடைமறித்து அந்த கப்பலில் இருந்த இலங்கையை சேர்ந்தவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர், ஆனால் படகில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலத்தினர்.
இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த படகு மற்றும் அதிலிருந்தவர்களையும் கொச்சியில் உள்ள மட்டன்சேரி தளத்திற்கு கொண்டுவரப்பட்டனர் , அதை தொடர்ந்து அந்த கப்பலில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், மொத்தம் 337 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 340 பொட்டலங்களில் ‘கிங் 2021’ எனும் முத்திரையுடன் கப்பலில் அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பலுச்சிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இரான் எல்லைகளில் அமைந்துள்ள, ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் ஹெராயினின் மக்ரான் கடற்கரையில் மற்றொரு படகில் இருந்து பெறப்பட்டு பின் இலங்கை கப்பல் மூலம் இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை பகுதிகளுக்கு கடத்தப்படுவது விசாரணையில் தெரிய வந்தது.
போதைப்பொருள் பறிமுதல், வலுவான ஆதாரங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில், எம் விமலஸ்ரீ, எம் சோமஸ்ரீ, எச் ஏ பெய்ரிஸ், டபுள்யூ பெரைரா மற்றும் ஏ பெரைரா ஆகிய ஐந்து இலங்கையை சேர்ந்தவர்களை, இந்திய கடல் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில வருடங்களாக ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த வழியின் மூலம் இலங்கையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் கடத்தல் நடைபெறுகிறது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் கடந்த ஆறு மாதங்களில் இது போன்று நான்கு பறிமுதல்கள் செய்யப்பட்டுள்ளன.