விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் மனு தர்மத்தின் படி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என பேசியது. இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தனை தொடர்ந்து இதற்கு முன் இந்து கடவுள்களை மற்றும் இந்து கோவிகள் பற்றி திருமாவளவன் இழிவாக பேசிய போது இல்லாத எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தற்போது மனு தர்மம் பற்றி திருமாவளவன் பேசியதற்கு கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தமிழக பெண்கள் திருமாவளவனுக்கு எதிராக அவர்களின் கண்டனத்தை வீடியோவாக பேசி பதிவு செய்து வருவது மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் திருமாவுக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து கொண்டே சென்றது. இந்த விவகாரத்தை முற்று புள்ளி வைக்க திருமாவளவனுக்கு துணையாக திராவிட ஊடகங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கிய வனிதா விஜயகுமார் மூன்றாவது கணவரையும் பிரிந்துள்ளார், இந்நிலையில் வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய இருப்பதாக திராவிட ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறது, இதன் பின்னணி குறித்து விசாரித்ததில் திருமாவளவனை இந்து பெண்களிடம் இருந்து காப்பாற்ற அவர் பேசிய சர்ச்சைக்குரிய விவகாரத்தை திசை திருப்ப இது போன்று திராவிட ஆதரவு ஊடகங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பாஜக தரப்பில் இது குறித்து விசாரித்ததில், வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய இருப்பதாக வந்த செய்தி உண்மை இல்லை, திருமாவளவன் விவகாரத்தை திசை திருப்ப சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி இது என விளக்கம் கொடுத்துள்ளனர்.