விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் சுமார் 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது பட்டாசு தொழில், சுமார் 8 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக பட்டாசு தொழில் முடங்கிய நிலையில் தற்போது அனைத்தும் தொழிலும் தொடங்கி, மீண்டும் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக சிவகாசி பகுதியில் நடந்து வருகிறது, நாட்டில் நடக்கும் பண்டிகை, திருவிழா போன்ற கொண்டாட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் சிவகாசி பட்டாசு தொழிலார்கள, குறிப்பாக வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை தான் அம்மக்களின் வாழ்வில் ஒலி ஏற்றி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் ராஜஸ்தான் மாநிலத்தில் சிவகாசி பட்டாசுக்கு தடை விதித்துள்ளது, சுமார் 10 லட்சத்துக்கு மேல் இருக்கும் சிவகாசி பட்டாசு தொழிலார்கள் வாழ்வாதாரத்தை குறிவைத்து வயிற்றில் அடிப்பது போன்று அமைந்துள்ளது, இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு பட்டாசு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.100 கோடி பட்டாசுகளை விற்பனை செய்ய ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சிவகாசி உற்பத்தியாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவகாசி பகுதியில் உள்ள மக்களின் மொத்த வாழ்வாதாரமே இந்த பட்டாசு தொழில்தான் என்பதால் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் அரசு சிவகாசி பட்டாசு வெடிக்க மாநிலத்தில் தடைவிதித்தது மூலம் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூரை வாக்களித்து வெற்றி பெற செய்த சிவகாசி பட்டாசு தொழிலார்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்து விட்டதாக சிவகாசி பட்டாசு தொழிலார்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர், கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிவகாசி பட்டாசு தொழிலார்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்த போதும் கண்டுகொள்ளாத மாணிக்கம் தாகூர், தற்போது அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சிவகாசி மக்களின் வயிற்றில் அடிப்பதை கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது என தெரிவித்த பட்டாசு தொழிலாளர்கள்.
மேலும் ஏற்கனவே தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் இருக்கின்ற தொழிலை மூடிவிட்டு 10 லட்சம் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி இருக்க நினைக்கிறார்களா? காங்கிரஸ் கட்சியினர் என்றும், இது தொடர்பாக நாங்கள் வாக்களித்து வெற்றி பெற்று தொகுதி பக்கமே வராமல் ஆந்திர, கர்நாடக என ஊர் சுற்றி வரும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உடனே ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுடன் பேசி சிவகாசி பட்டாசு விற்பனைக்கு விதித்த தடையை நீக்கவில்லை என்றால் சிவகாசி பகுதிக்குள் நுழைய முடியாது என சிவகாசி பட்டாசு தொழிலார்கள் கடும் கோவத்துடன் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.