அரசியல் விமர்சகர் மாரித்தாஸ், நடிகர் சித்தார்த் குறித்து ஒருமையில் கருத்து தெரிவித்திருந்தது கடும் விமர்சனம் எழுந்தது, இதற்கு நடிகை கஸ்தூரி நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா ? சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. நீங்க ஒருவரை அசிங்க படுத்த வேண்டும் என்றால் அது உங்கள் விருப்பம், ஆனால் அவர்களின் நடிப்பு தொழிலை அவமரியாதை செய்ய வேண்டாம் என நடிகை கஸ்தூரி பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் எழுத்தாளர் மரித்தாஸ் விளக்கம் கொடுத்துள்ளார் அதில், சித்தார்த் “டேய்” என்று சொல்வதும் “கூத்தாடி” என்று விமர்சனம் வைத்ததும் நாகரீகமாக இல்லை மாரிதாஸ். தங்களுடைய பதிவு போலவே இல்லை. என்று பலர் கூறியிருந்தனர். அவர்கள் பலருக்கும் தெரியவில்லை சிர்தார்த் சில வாரம் முன் “டேய் தடுப்பூசி எங்கடா” என்று மறைமுகமாகப் பிரதமரைச் சாடி இருந்தான். (அடுத்து சில தினங்கள் முன் மாநில முதல்வரை அறைவேன் என்றான்.)
தற்போது அவன் மறைமுகமாக வேலை செய்த திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இதுவரை பார்க்காத அளவு பிணங்கள் எரியும் வாடையில் தான் தமிழக விடியல் பிறக்கிறது. இது தான் திமுக கொடுத்த விடியல். ஆனா சித்தார்த் மரண அமைதி நிலைக்குச் சென்றுவிட்டான். எனவே டேய் சித்தார்த் பெட், மருந்து, பிணம் எரிக்க இடம், விடியல் எங்கேடா? என்று கேட்டுப் பதிவு வெளியிட்டோம் அவனுக்கு என்ன அதிகபட்ச மரியாதை கொடுக்க முடியுமோ அந்த மரியாதை கொடுத்து.
அதில் கூத்தாடி என்ற வார்த்தை கடும் கோபத்தில் வந்து விழுந்த வார்த்தை. தவிர நோக்கம் தவறானதல்ல. Facebook பதிவில் edit செய்துவிட்டேன். ஆனால் Twitter அது edit முடியாது என்பதால் அப்படியே விட்டுவிட்டோம். இதற்காக மன்னிப்புலாம் கேட்கவும் முடியாது வருத்தப்படவும் எதுவும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் , இளவரசர் உதயநிதி அனைவரின் மீதும் விமர்சனம் வைத்துள்ளேன் ஒரு நாளும் டேய் வாடா போடா என்பது போல் தரக்குறைவாகப் பிரபலங்களையோ தலைவர்களையோ பேசியவன் அல்ல.
திமுகவுக்கு கூலி வேலை பார்க்கும் சித்தார்த் விமர்சனங்கள் கீழ்த்தரமானவை ஆக அவைகளுக்கு அந்த அளவில் தான் பதில் கொடுக்க முடியும். சித்தார்த் வயசுக்கு வேண்டுமானால் மரியாதை கொடுக்கலாம். ஆனால் 43 வயது எருமைமாடு ஒரு விமர்சனம் ஒழுங்கா மரியாதையா வைக்கத் தெரியவில்லை என்றால் வயது வெறும் எண். எனவே அதுவும் முடியாது என மாரிதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.