மாரிதாஸ் கைது செய்ய வேண்டுமா.? அடம் பிடிக்கும் தர்மபுரி திமுக எம்பி….எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, விரைவில் திமுக ஆட்சி அமைந்ததும் திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்யும், சமூக வலைதள பிரபலம் கிஷோர் கே சாமி மற்றும் மரித்தாஸ் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள், என மிரட்டும் போக்கில் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தார் திமுக தர்மபுரி எம்பி செந்தில் குமார், ஆனால் இவரின் இந்த மிரட்டல் பதிவை எதிர் தரப்பில் இருப்பவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை, அவர்கள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார், இதற்கு மாரிதாஸ் தனது டிவீட்டர் பக்கத்தில், “தி.மு.க நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் தி.மு.க ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி.” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த திமுக எம்பி செந்தில்குமார் தைரியம் இருந்தா கை வைச்சு பாரு… நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பி கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும்”என மாரிதாஸை மிரட்டும் வகையில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சென்னையில் நிலக்கரி காணாமல் போனது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தது குறித்து மாரிதாஸ் தனது டிவீட்டர் பக்கத்தில், திமுக ஆட்சிக்கு வந்த 100நாளில் முக்கிய சாதனை மின்வாரியத்திலிருந்து 2லட்சம் டன் நிலக்கரி காணவில்லை. தகவல் கசிந்ததும்;திமுக அமைச்சர் நிலக்கரி காணவில்லை என்று இன்று பேட்டி கொடுக்கிறார். அது சுமார் 20நாள் தேவையான நிலக்கரி , தினமும் update செய்ய வேண்டிய தகவல் திடீர் என எப்படி மாயம்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு திமுக எம்பி செந்தில்குமார், ஏற்கனவே மாரிதாஸ் மீது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டு, இதுவரை தமிழக காவல்த்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதற்கான காரணமும் தெரியவில்லை, தொடர்ந்து மாரிதாஸ் தவறான தவகல்களை பரப்பி வருகிறார் என தெரிவித்த தர்மபுரி எம்பி செந்திகுமார் அவர்களுக்கு, நீங்கள் புகார் கொடுத்த உடனே யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முடியாது, அவர்கள் தவறு செய்திருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என வலைதளவாசிகள் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடதக்கது.