தனிக்கட்சியா.? பாஜகவில் இணைவதா.? முக அழகிரி அவசர ஆலோசனை.! தென்மாவட்டத்தில் கூண்டோடு திமுகவை காலி செய்ய திட்டம்.!

0
Follow on Google News

வருகின்ற 21 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அமித்ஷா தமிழகம் வந்த பின்பு தான் அரசியல் களம் மாறும் என அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அமித்ஷா வருவதற்கு முன்பே மாற்றங்கள் நிகழ தொடங்கி விட்டது, அதில் ஓன்று தான் அமித்ஷா தமிழகம் வருவதற்கு முதல் நாள், திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

2011 வரை திமுக தென் மண்டலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக அழகிரி அதன் பின் தனது சகோதரர் ஸ்டாலினால் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டர், தந்தை கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை அமைதியாக இருந்த முக அழகிரி, கருணாநிதி மறைவுக்கு பின் மீண்டும் திமுகவில் முக்கிய பதவி கேட்டார் ஆனால் அதற்கு ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்தார், கட்சியில் தான் தனக்கு இடமில்லை முரசொலி அறக்கட்டளையில் தனது மகன் தயாநிதி அழகிரியை ஏற்கனவே இயக்குனராக இருக்கும் உதயநிதியுடன் இணைத்து தயாநிதி அழகியையும் முரசொலி அறக்கட்டளையில் இயக்குனராக நியமிக்க கோரிக்கை வைத்தார் அழகிரி.

ஆனால் கட்சி மற்றும் அறக்கட்டளை என எதிலும் முக அழகிரி குடும்பத்துக்கு இடம் கொடுக்கவில்லை ஸ்டாலின் குடும்பம், இந்நிலையில் பொறுமை இழந்த முக அழகிரி தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து சென்னையில் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தி தனது பலம் என்ன என்பதை நிருபித்தார் முக அழகிரி, இதனை தொடர்ந்து எக்காரணத்தை கொண்டு ஸ்டாலின் முதல்வராக வந்துவிட கூடாது என்பதில் முக அழகிரி உறுதியாக இருந்தார்.

தன்னை அரசியலில் இருந்து ஓரம் கட்டிய ஸ்டாலினுக்கு எதிராக வருகின்ற 2021 சட்டசபை தேர்தலில் சாட்டையை சுழற்ற ஆரம்பித்து விட்டார் முக அழகிரி, வருகின்ற 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கும் முக அழகிரி, தனி கட்சி தொடங்குவதா.? அல்லது பாஜகவுடன் இணைவதா.? என்பது குறித்து ஆலோசனையின் போது முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அழகிரி ஆலோசனை கூட்டத்துக்கு பின் தனது நிலைப்பாடு என்ன என்பது பற்றி தமிழகம் வரும் அமித்ஷா அவர்களிடம் முக அழகிரி தெரியப்படுத்துவர் என்றும், அதில் முக அழகிரி பாஜகவில் இணைவது உறுதி செய்யப்பட்டால் வரும் ஜனவரி மாதம் மதுரையில் மிக பெரிய விழா ஏற்பாடு செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்க படுகிறது, மேலும் தற்போது திமுகவில் இருக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்த முக்கிய திமுக புள்ளிகள் முக அழகிரியுடன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் கூண்டோடு தென்மாவட்டத்தில் திமுகவை முக அழகிரி காலி செய்துவிடுவார் என கூறப்படுகிறது.