தானாக சென்று கரண்ட் கம்பியில் மின்சாரம் செல்கிறது என்கிற புரிதல் இல்லாமல் அதில் அமர்ந்து பலியாகும் அணில் போன்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரித்த வலையில் தானாக வந்து தற்போது சிக்கி தவித்து வருகிறார் மின்சாரத்துறை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மின்சார துறையில் 5000 கோடி வரை முறைகேடு நடக்க இருப்பதாகவும். இதை நிறுத்தாவிட்டால் மக்கள் மத்தியில் அதற்கான ஆவணத்தை வெளியிட்டு திமுக அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்த ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும் அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காலவகாசம் வழங்கி இருந்தார். ஆனால் 24 மணி நேரமில்லை, சில நிமிடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி 4 % சதவிகிதம் கமிஷன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட ஆதாரத்தை வெளியிட்டு அதிரடி காட்டினார் அண்ணாமலை.
மேலும், கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்ய பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை இது என அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார் அண்ணாமலை. இந்நிலையில் இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் தெரிவித்திருந்தார்.
இதற்கு இதோ ஆதாரம் என முதல்வர் முக ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை, அதில், அமைச்சர் ஒருவர் இருந்தார் செந்தில் பாலாஜி, அவரை பற்றி சொல்லவே தேவையில்லை, ஒரு முக்கியத்துவமான அமைச்சராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக, சசிகலாவுக்கு நெருக்கமாக, அதை விட இளவரசிக்கு மிக மிக நெருக்கமாக இருந்தவர் செந்தில் பாலாஜி.
அமைச்சரவையை ஏற்கனவே 15 முறை மாற்றி அமைத்தார்கள், சீனியர் அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டனர், ஆனால் இந்த ஜூனியர் அமைச்சர் மாற்றி அமைக்க படவில்லை.இடையில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது யாரை முதல்வராக்க வேண்டும் என்ற போது இவர் கேட்ட கேடுக்கு செந்தில் பாலாஜி பெயரும் இருந்தது. ஆக. செந்தில் பாலாஜி தம்பி கரூர் மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
கட்டுப்பாடு என்றால், கொள்ளை அடிப்பதில், ஊழல் செய்வதில், லஞ்சம் வாங்குவதில் அந்த கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆட்கடத்தல் ,நில அபகரிப்பு போன்ற வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் இருக்கு. அதே போன்று பேருந்துகளுக்கு டிக்கெட் கொடுப்பதற்கு வாங்கப்பட்ட கருவி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது குறித்து நான் தான் சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் பேசினேன், இதுவரை மறுப்பு கிடையாது.
அது மட்டுமில்லை பொறியியல் படித்து கொண்டிருந்த கோகுல் என்கிற இளைஞரை கடத்தி, அவரை கொலை மிரட்டல்செய்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்றது என அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி குறித்து எதிர்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த ஆதாரம் போதுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.