சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை எதிர்த்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்தார். இதன் பின்னனியில் ஸ்டாலினை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்காக சீமானை கொளத்தூர் தொகுதியில் திமுக தான் களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2009 இலங்கை யுத்தத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி, ஆரம்பத்தில் தனி ஈழம் அமைப்போம், தமிழ் தேசியம் அமைப்போம் என அரசியல் பேசி வந்த சீமானுக்கு உலகம் முழுவதும் உள்ள ஈழ தமிழர்களிடம் இருந்து பெரும் தொகை வந்ததாக கூறபடுகிறது, பின் நாளடைவில் சீமானின் பேச்சில் நம்பகத்தன்மை இல்லாமல் போனதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பண வரவு குறைய தொடங்கியது.
இந்நிலையில் ஈழ போரை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சியை கண்டுகொள்ளாமல், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர் சீமான் இதன் பின்னணியில் சில அமைப்புகள் சீமானுக்கு பணம் கொடுப்பதாக கூறப்பட்டது, இப்படி காலத்துக்கு ஏற்ப தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு வந்த சீமானுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைய தொடங்கியது, மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் சீமானின் ஏமாற்று வேலையை அறிந்து அந்த கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போவதாக சீமான் பேசியது குறித்து, நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய கல்யாணசுந்தரம் கூறுகையில், சீமானின் இந்த முடிவு ஸ்டாலினை வெற்றி பெற வைப்பதற்கான செயல் என்றும், திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரித்து ஸ்டாலினை வெற்றி பெற செய்வதற்கான ஏற்பாடு தான் இது என சீமான் மீது குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் இது குறித்து சில தகவல் வெளியாகி உள்ளது, அதில் கொளத்தூர் தொகுதியில் திமுகவுக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளதை தொடர்ந்து, தொகுதி மாறி போட்டியிட்டால் பெரும் சர்ச்சை ஏற்படும் என முடிவெடுத்த ஸ்டாலின் திமுக எதிர்ப்பு வாக்குகளை முழுமையாக அதிமுக கூட்டணிக்கு செல்லாமல் தடுத்தால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என முடிவெடுத்து, சீமானை களம் இறக்கி திமுக எதிப்பு வாக்குகளை பிரிக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.