சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் தண்டனை அனுப்பித்து வரும் சசிகலா வரும் 27ம் தேதி சிறையில் இருந்து வெளியில் வருகிறார், முதல்வர் நாற்காலி அருகில் சென்று அமரும் வாய்ப்பு பிரகாசமாக இருந்த சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு அரியணையில் அமரவிடாமல் சிறைக்கு அனுப்பியது, இதன் பின்பு TTV தினகரன் பின்னால் இருந்த சசிகலா ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி அதிமுகவில் தங்களை இணைந்து கொண்டனர், தற்போது தினகரன் மட்டும் தனிமையில் சசிகலாவை வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக சசிகலா சிறையில் இருந்து வந்தவுடனுடம் அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று, சில தொண்டர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் TTV தினகரன், அவர்களும் சசிகலா வருகைக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருக்கும் செய்தி வெளியான பின்பும் கூட எந்த ஒரு சலசலப்பு தமிழக அரசியலில் ஏற்படவில்லை, மாறாக சசிகலா விடுதலை ஒரு பெட்டி செய்தியாக அடங்கிவிட்டது.
மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியாகும் அதே தேதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார், இது சசிகலா சிறையில் இருந்து வெளியாகும் செய்தியை இருட்டடிப்பு செய்ய தான் என்று கூறப்படுகிறது, மேலும் சசிகலா தண்டனை முடிவு பெற்ற குற்றவாளி என்பதால், வரும் 27ம் தேதி, கர்நாடக சிறைத்துறை பரப்பன அஹ்ரகார சிறையில் இருந்து வெளி யேற்றி போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லை வரை கொண்டு வந்து அன்று இரவு 9 மணியளவில் விடுவார்கள், இரவு 9ம் மணிக்கு மேல் சசிகலாவுக்கு எந்த ஒரு பிரமாண்ட வரவேற்பு அளித்தலும் அதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
மேலும் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வருகின்ற அன்று தான் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நடக்க இருப்பதால், அதிமுகவினரின் கவனமும் ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கியே இருக்கும். இதனால் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது.
தற்போது சசிகலா மருத்துவனைக்கு சென்று விட்ட்டதால், அடுத்த இரண்டு வாரத்துக்கு தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வருகின்ற 27 ம் தேதி கர்நாடக சிறைத் துறை சசிகலாவை விடுதலை செய்து அவருடைய பொருட்களை மருத்துவமனையில் இருக்கும் அவரிடம் ஒப்படைத்துவிடும், இதன் பின்பு தண்டனை கைதி என்கிற அளவில் சசிகலாவிற்கு அளிக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும், இதன் பின்பு ஒரு குறிப்பிட்ட தேதியில் சசிகலா கர்நாடக மருத்துவமனையில் இருந்து அதிக வாகனங்கள் அணிவகுக்க தமிழகம் நோக்கி வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .