TTV தினகரனுக்கு செம்ம டோஸ் கொடுத்து, அரசியலில் இருந்து விலக சசிகலா முடிவு.! தினகரனின் அடுத்தகட்ட முடிவு என்ன.?

0
Follow on Google News

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்ததும் அதிமுகவை கைப்பற்றி விடுவார், அரசியலில் மிக பெரிய மாற்றம் என காத்திருந்த அமமுக கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2011ஆம் ஆண்டு சசிகலாஅவரது குடும்ப உறுப்பினரான TTV தினகரன், திவாகரன் என அனைவரையும் அதிமுகவில் இருந்து நீக்கினார், இவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் எந்த தொடர்பும் வைக்க கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த சம்பவத்தில் சசிகலாவை போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றினர் ஜெயலலிதா.

இதன் பின்பு தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, இனிமேல் தனது குடும்ப உறுப்பினருடன் எந்த ஒரு தொடர்பும் வைத்து கொள்ளமாட்டேன் என சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்தபின்பு தன்னுடன் இணைத்து கொண்டார் ஜெயலலிதா, இதனை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் வரை அவரிடம் நெருங்க முடியமால் விலகி இருந்த சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதா மரணம் அடைந்து அவரது உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட போது அந்த இடத்தை பெருமளவில் சசிகலா குடும்பம் ஆக்கிரமித்து கொண்டிருந்ததை பார்க்க முடித்து.

இதன் பின் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி விட துடித்த சசிகலா சிறைக்கு சென்றதும், எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் தலைமையின் இருக்கும் அதிமுக சசிகலா குடும்ப உறுப்பினர்களை ஒதுக்கி வைத்தது, இதனை தொடர்ந்து சசிகலா பெயரை பயன்படுத்தியும், அதிமுகவை கைப்பற்றி விடுவோம், அப்படி கைப்பற்றி ஆட்சி அமைந்ததும் உங்கள் அனைவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல் போன்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களை ஏமாற்றி, அவர்களை பதவி இழக்க செய்து நடு தெருவில் நிறுத்தினார் TTV தினகரன்.

TTV தினகரன் திட்டமிட்டு ஏமாற்றப்படுவதை உணர்ந்த செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்து கடந்த இடைதேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார்.இதனை தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற அணைத்து நாடாளுமன்ற தொகுதியிலும், சட்டமன்ற இடைதேர்தலிலும் அமமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார், புகழேந்தி அதிமுகவில் இணைந்தார், இப்படி தொடர்ந்து தினகரன் கூடாரம் காலியானது.

ஆனால் அமமுக நிர்வாகிகளை தனது வசீகரமான பேச்சால் ஏமாற்றி தக்க வைத்துக்கொண்டார் தினகரன், அவர்களும் சசிகலா சிறையில் இருந்து வந்ததும் மாற்றம் வரும் என எதிர்ப்பது தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர், சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்பும் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்த அன்று பரப்பரப்பாக பேசப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் சசிகலா என்ன ஆனார் என்று தெரியவில்லை.

இதனை தொடர்ந்து சசிகலாவை தீவிர அரசியலில் ஈடுபடுத்த வைக்க முயற்சி மேற்கொண்ட தினகரன், இது குறித்து சசிகாவிடம் பேசியுள்ளார், அதற்கு சசிகலா நான் சிறைக்கு செல்லும் முன்பு உன்னிடம் இருந்த முக்கிய நபர்கள் அனைவரையும் விரட்டி விட்டுட்டு, கிராமத்தில் கோலி குண்டு, கில்லி விளையாடும் பயலுக்கு பதவிய கொடுத்து ஏமாற்றி வச்சிருக்கியே அவர்களை நம்பி அரசியல் செய்யணுமா.? உன்னை யார் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட சொன்னது, புதிய கட்சி எதுக்கு தொடங்கின, நாடாளுமன்ற தேர்தலில் எதற்கு போட்டியிட்ட என செம்ம டோஸ் கொடுத்த சசிகலா.

ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு உன்னை அரசியலுக்கு உள்ளே இழுத்துவந்ததற்கு, எனக்கு கிடைத்த பரிசு 4 வருடம் சிறை தண்டனை, நமது குடும்ப உறுப்பினர்கள் சொத்துக்கள் பல கோடி முடக்கம், நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது குடும்ப உறுப்பினர்களை தான் பாதிக்கின்றது, இப்போதைக்கு ஏதும் பேச வேண்டாம், நீ ஆரம்பித்துள்ள கட்சியை நம்பி அரசியல் செய்தால் டெபாசிட் கூட வாங்க முடியாது, தற்போது உள்ள சூழல் நமக்கு அரசியல் செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லை என சசிகலா செம்ம டோஸ் கொடுத்து TTV தினகரனிடம் தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .