நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தரப்பில் யார் எதிர்கட்சி தலைவர் என்கிற போட்டி, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இறுதியில் அதிமுகவில் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினர் எடப்பாடி பழனிச்சாமி, இதனை தொடர்ந்து அதிமுகவை முழுமையாக கைப்பற்ற அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ள எடப்பாடி படி படியாக ஓ பன்னீர் செல்வதை அதிமுகவில் இருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் சசிகலா தயவில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றாலும் அவர் சசிகலாவுக்கு விசுவாசமாக இல்லை, இதனிடையே அதிமுகவில் தனக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி விட சசிகலா மேல் என முடிவு செய்து சசிகலாவுடன் ரகசிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டார் ஓபிஎஸ், இதன் தொடர்ச்சியாக சசிகலாவை அதிமுக உள்ளே கொண்டு வர தேர்தலுக்கு முன் பாஜக உதவியுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் ஓபிஎஸ், ஆனால் இதற்கு எடப்பாடி பிடி கொடுக்கவில்லை.
இதனிடையே தேர்தல் முடிந்த இந்த சூழலில், எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ள ஊழல் குற்றசாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் எதிர்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் மனு கொடுத்திருந்தார், மேலும் தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு அதிமுக அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் குற்றசாட்டுகளை தூசி தட்ட தொடங்கியுள்ளது திமுக அரசு, இதனிடையே டெல்லி உதவியை பெற முயற்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு இறுதியில் உங்கள் மேல் குற்றமில்லை என்றால் வழக்கை சந்தித்து நிரூபித்து காட்டுங்கள் என டெல்லி தலைமை கைவிரித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது உள்ள ஊழல் குற்றசாட்டு தொடர்பாக அவர் நீதி மன்றம் செல்ல நேரிடும் என்றும், அதே வேலையில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா நீக்கப்பட்டது செல்லாது என சசிகலா தரப்பில் தொடர்ந்து வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது, தேர்தலுக்கு முன்பு சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தாலும், அவர் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் குறித்த வழக்கை இதுவரை வாபஸ் பெறவில்லை.
இந்நிலையில் எடப்பாடிக்கு எதிராக சசிகலாவை அதிமுக உள்ளே அழைத்து வர தீவிரமாக களம் இறங்கியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் குறித்த வழக்கில் சசிகலாவுக்கு சாதகமாக செய்யப்பட இருப்பதாகவும், அவருடன் அதிமுக அவை தலைவர் மது சூதனன் ஒன்றிணைத்துள்ளதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து ஓபிஎஸ் நடவடிக்கைகளை பார்க்கும் போது சசிகலா அதிமுகவின் தலைமை பீடத்தில் அமர்ந்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது அரசியலில் ஓபிஎஸ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.