ராகுல் காந்தி செல்லும் வழியில் சாலை மறியல்! இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனா கோ பேக் ராகுல்.!

0
Follow on Google News

இன்று நடைபெறும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ராகுல் காந்திக்கு எதிராக, இந்திய அளவில் கோ பேக் ராகுல் என்ற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வருகிறது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தரமாக தடை விதிக்கு நிலைக்கு சென்றது பின் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக மாபெரும் மெரினா புரட்சிக்கு பின் அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசித்த பின் ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற்றது மட்டுமில்லாமல், மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்காதபடி நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டனர், இதன் பின் தொடர்ந்து தடையின்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி இன்றும் மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது, மதுரை விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம் உள்ளது, இதற்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி அவனியாபுரம் செல்லும் வழியில் மதுரை பாஜகவினர் ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, பின் காவல்த்துறை சரி செய்தனர், இந்நிலையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் காந்தி பார்வையிட்டு வரும் நிலையில் இந்திய அளவில் கோ பேக் ராகுல் என்ற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வருகிறது, அதே வேலையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தமிழகம் வருவதையொட்டி வெல்கம் நட்டா ஜி என்ற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வருவதும் குறிப்பிட்டத்தக்கது.