இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக பரபரப்பு நிலவி வரும் நிலையில்,அது குறித்து சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் அவர் பேசியதாவது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, ஆனால் இதுவரை ஆக்சிஜன் உற்பத்தி இருந்தா அளவை விட நான்கு மடங்கு உற்பத்தியை இந்தியா முழுவதும் அதிகரிப்பு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்கள், 240 டன் தினமும் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது, தற்போது உள்ள பிரச்சனை ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, ஆக்சிஜன் விநியோகத்தில் தான் இருக்கிறது, இந்தியாவில் இதற்கு முன்பு நம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ததை விட நான்கு மடங்கு அதிக உற்பத்தி செய்துவருகிறோம்.
குறிப்பாக தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பதே, கிடையாது மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் உள்ளது, சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து இலவசமாக அரசுக்கு தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள், ஆனால் இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள், பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கூடாது என சொல்கிறார்கள்.
ஆனால் இவர்கள் தான் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார்கள், அப்படியானால் இவர்களின் அக்கறை உண்மையில் எந்த பக்கம் இருக்கிறது, பீதியை கிளப்ப வேண்டும் பிரச்சனையை கிளப்பனும், மரண ஓலம் கேட்கணும், ஆட்சி சரியில்லை அரசாங்கம் சரியில்லை என சொல்வது தான் இவர்களின் முயற்சியாக இருக்கிறது, ஆபத்தான நிலையில் எதிரியாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து உதவியை வாங்க வேண்டும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலை கார்பன் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கவில்லை, ஆக்சிஜன் உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் இலவசமாக விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளது, அது உண்மையானால் என்ன ஆனாலும் பரவாயில்லை போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நினைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்துவது பற்றி மக்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன் என ரங்கராஜ் பாண்டே தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, வலைதளவாசி ஒருவர் தனது டிவீட்டர் பக்கத்தில் தேசம் உடைகிறது, வயிறு எரிந்து சொல்றேன் ரங்கராஜ் பாண்டே உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது நாசமா போவ என பதிவு செய்திருந்தார், இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள பிரபல பேச்சாளர் சுந்தரவள்ளி ஆமா தோழர் அந்த நாய்க்கு நல்ல சாவே வராது என பதிவு செய்துள்ளார்.