தமிழக அரசியல் என்பதை அமித்ஷா தமிழகத்திற்கு வருவதற்கு முன், வருவதற்கு பின் என்று தான் பிரித்து பார்க்கப்பட வேண்டும் என அமித்ஷா சமீபத்தில் தமிழகம் வந்த போது பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியது போன்று, அமித்ஷா தமிழகம் வந்து டெல்லி திரும்பிய பின்பு தமிழக அரசியலில் மாற்றம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும் சில தினகளுக்கு முன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் உடன் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்கு பின் திடீரென அமித்ஷா தமிழகம் வந்து அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்கிறார், அதன் பின் சென்னையில் தங்கிய அமித்ஷா முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார், அதில் ஆடிட்டர் குருமூர்த்தியை தனியாக சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார் அமித்ஷா.
பின் அமித்ஷா டெல்லி சென்றது ரஜினிகாந்த் தனது மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிள் சந்திப்பை நடத்துகிறார், அடுத்த சில தினகளில் ஜனவரியில் கட்சி தொடங்குகிறேன், அறிவிப்பு டிசம்பர் 31 வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது தமிழக அரசியல் உச்சகட்டத்தை கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் பாஜகவின் அறிவுசார் மாநில பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவில் இருந்து விலகி ரஜினிகாந்த் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நான்கு முனை போட்டியை உருவாக்கி திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எதிராக அமித்ஷா அமைக்கும் சக்கர வியூகத்தை உடைப்பாரா ஸ்டாலின் என்பது தான் வருகிற சட்டமன்ற தேர்தலின் நடக்க இருக்கும் அரசியல் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள், மேலும் பாஜக உடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிடவும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஜனவரி மதத்துக்கு பின்பு தான் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கணிக்க முடியும் என்றும், ஆனால் தமிழக அரசியலில் தன்னை முழுவதுமாக அமித்ஷா ஈடுபடுத்தி கொண்டுவிட்டதாகவே அரசியல் விமர்சனகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.