நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியாகி மூன்று வருடம் கடந்த நிலையில் அவர் வருவாரா.? மாட்டாரா.? என்கிற பரபரப்பு தொடர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. சமீபத்தில் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ரஜினிகாந்த் உடன் முக்கிய ஆலோசனை நடத்திய பின்பு தான் ரஜினிகாந்த் அரசியல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
கடந்த நவம்பர் 1ம் தேதி நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசிய சில வாரங்களில் தனது ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களை அழைத்து ராகவேந்திரா மண்டபத்தில் கூட்டம் நடத்தினர் ரஜினிகாந்த், தனது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் பேசியபோது, அணைத்து மாவட்ட தலைவர்களும் ஒருமித்த கருத்தாக உங்கள் ஆரோக்கியம் தான் எங்களுக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார்கள், இதனிடையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா.? என்கிற சந்தேகம் வலுத்தது.
இதனிடையே இந்த நிகழ்வு நடந்த அடுத்த சில நாட்களில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதாக செய்திகள் வெளியாகி அடுத்தகட்ட பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டது, நவம்பர் 23ம் தேதி தமிழகம் வந்த அமித்ஷாவை சென்னையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் நேரில் சந்தித்து பேசினார் ஆடிட்டர் குருமூர்த்தி, அப்போது ரஜினிகாந்த் தனது நிலைப்பாடு குறித்து குருமூர்த்தியிடம் தெரிவித்த தகவலை அமித்ஷாவிடம் தெரிவித்ததாக கூறபடுகிறது.
இதனை தொடர்ந்து அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பின்பு அடுத்த சில நாட்களில் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் தொடக்கம், அறிவிப்பு டிசம்பர் மாதம் 31ம் தேதி வெளியிடப்படும் என அதிரடி அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட்டார், இந்நிலையில் ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சிக்கான அறிவிப்புக்காக தமிழகம் மட்டுமில்லை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், புதிய அரசியல் கட்சியை தான் தொடங்கவில்லை என நேற்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு அனைவரையும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினிகாந்த் உடல்நலம் திரும்பிய பிறகு அவர் தனது முடிவைப் பற்றி என்னிடம் கூறினார். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அரசியலில் நேரடியாக இல்லாமல் அவர் தமிழக மக்களுக்கு சேவை செய்வார் என்று அவர் கூறியதன் இறுதி பாராவைப் படியுங்கள். எனது மதிப்பீட்டில் அவர் 1996 போன்று தமிழக அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அடித்து கூறியுள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .