கடந்த இரண்டு தினங்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி விவாதத்தை தொடங்கி தமிழகம் தொடர்பாக நிறைய விஷயங்களை பேசினார். அதில், மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,
மேலும், தமிழக மக்களிடம் தமிழ்நாடு மற்றும் தமிழ் குறித்த புரிதல் உள்ளது. அதேநேரம் இந்தியா குறித்த புரிதலும் அவர்களிடம் உள்ளது. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என மத்திய அரசையும் பாஜகவையும் ராகுல்காந்தி கடுமையாக சாடியிருந்தார். தமிழகத்துக்கு எதற்கு முக்கியத்துவம் அளித்து ராகுல் காந்தி பேசுகிறார் என அங்கே இருந்தவர்கள் பலருக்கு குழப்பம் நீடித்தது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்திக்க வந்த ராகுல்காந்தியிடம் மக்களவை உரையில் தமிழகம் குறித்து அதிகம் பேசியதற்கான காரணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல், நான் ஒரு தமிழன் என்றார். இதனை தொடர்ந்து தமிழகத்தின் மீது அதிக அக்கறையுடன் ராகுல் காந்தி பேசியது பின்னணி குறித்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் விசாரித்ததில்.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி இம்முறை தமிழகத்தில் போட்டியிட மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டி விட திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில்,
தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால் தமிழக தேர்தல் களத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக ராகுல் காந்தி இடம் பெறுவார், இதனால் காங்கிரசை தவிர்க்க முடியாத சூழலுக்கு திமுக தள்ளப்படும் என்றும், ஆகையால் கூட்டணியை தக்க வைக்கவும் இது ஒரு தந்திரம் என கூறப்படும் நிலையில், தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் ராகுல்காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.