கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசு திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்று 9 தொகுதிகளில் வெற்றி பெற செய்தார், அதன் பின்பு தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்து போதிய தொகுதிகளை பெற்று தரவில்லை என்கிற குற்றசாட்டு இருந்து வந்த நிலையில் சட்டசபை தேர்தலிலும் தொகுதி பங்கீட்டில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல் காந்தி, திமுக நடவடிக்கைகள் மீது அதிருப்தியை தெரிவித்து கமலஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலையை தொடங்க வலியுறுத்தினார் ஆனால் கே.எஸ்.அழகிரி திமுகவை எதிர்பார்த்து காத்திருந்தார், கடந்த சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி இம்முறை குறைந்தது 30 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்க பட்டது.
ஆனால் கடும் போராட்டத்துக்கு பின் 25 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது, அதில் 15 தொகுதிகள் அதிமுக வலுவாக உள்ள தொகுதிகள், இந்நிலையில் கிடைத்த 25 தொகுதிகளை பேரம் பேசி பணம் படைத்த வேட்பாளர்களுக்கு விற்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மீது குற்றசாட்டு எழுந்தது, இது தொடர்பாக ராகுல் காந்திக்கு புகார் கொடுக்கபட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது, சில காங்கிரஸ் தலைவர்கள் இந்த குற்றசாட்டை வெளிப்படையாகவே பேசி பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கடும் கோவத்தில் இருந்து வரும் ராகுல் காந்தி தேர்தலுக்கு பின் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, சட்டசபை தேர்தலில் 8 தொகுதிகளுக்கு குறைவாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் கே.எஸ்.அழகிரியிடம் இருந்து தலைவர் பதவி பறிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வரும் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு அடுத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது, அதற்கான அரசியல் நகர்வுகளையும் ஜோதிமணி செய்து வருவதாக தகவல் வெளியாகிவருகிறது, மேலும் தற்போது உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சில முக்கிய தலைவர் மீது தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் ஜோதிமணி புகார் தெரிவித்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது.