எல்லாத்திலும் மூக்கை நுழைக்கும் PTR தியாகராஜன்…..கடுப்பான சீனியர் அமைச்சர்கள்…கடும் கோபத்தில் தமிழக முதல்வர்..!

0
Follow on Google News

தமிழகத்தில் புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள PTR தியாகராஜன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் கடந்த காலத்தில் நிதி அமைச்சராக இருந்து வந்துள்ளனர், ஆனால் திமுகவில் துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு என பல மூத்த தலைவர்கள் இருக்கையில் நிதி துறையை தியாகராஜனுக்கு வழங்கியது மூத்த தலைவர்கள் பலர் சங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் செலவு செய்து வந்த பழனிவேல் தியாகராஜன், 2016 சட்டசபை தேர்தலில் போது தமிழக அரசியலில் என்ட்ரி கொடுத்து சட்டமன்ற உறுப்பினரானர், இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக ஐடி பிரிவை தலைமை ஏற்று நடத்திய பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் திமுக தலைவராக இருந்த முக ஸ்டாலினுக்கு எதிராக சமூக ஊடகத்தில் பரபரப்பாக கூறப்பட்டு குற்றசாட்டுகளுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் பலமுறை தோல்வியை சந்தித்தது திமுக ஐடி பிரிவு.

அதில் பெரும் சர்ச்சையாக வெடித்த முரசொலி அலுவலகதின் மூல பாத்திரம் தொடர்பானது, மற்றும் முக ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைகளை எதிர்கொள்ள முடியாமல் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான திமுக ஐடி பிரிவு தோல்வியை தழுவியதை தொடர்ந்து, திமுக ஐடி பிரிவு மீது நம்பிக்கை இழந்த திமுக தலைமை பிரபல ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தமிழக அரசியலில் 5 வருட சட்டமன்ற உறுப்பினர் என்கிற அனுபவம் மட்டும் இருக்கும் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக பதவி ஏற்றபின்பு, அவர் துறையை மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற துறைகள் தொடர்பாக மீடியாக்களில் பேட்டி கொடுப்பது போன்று சம்பந்தமில்லாமல் எல்லாத்திலும் அவர் மூக்கை நுழைத்து வருவது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும், தன்னை அணைத்து விவகாரங்களிலும் முன்னிலை படுத்தி வருவது மூத்த திமுக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மீது கடுப்பாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவசரப்பட்டு பழனிவேல் தியாகராஜனுக்கு நிதி துறையை கொடுத்து விட்டோமா என முதல்வர் முக ஸ்டாலினை சிந்திக்க வைத்துள்ளதாக கூறபடுகிறது, மேலும் தொடர்ந்து ஜாக்கி வாசுதேவ் விவகாரம் தொடங்கி பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் பழனிவேல் தியாகராஜன் திமுக மீது அவப்பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.