கடந்த 17ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை, இது குறித்து கடும் சர்ச்சை எழுந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 17ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில், தாமதமாகத்தான் தனக்கு மத்திய அரசு தரப்பு தகவல் அளித்ததாகவும், மீட்டிங்கில் பேச வேண்டிய அஜென்டாவும் அதை விட தாமதமாக தரப்பட்டதாகவும்,
எனவேதான் ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தில் பங்கேற்கவில்லை மேலும் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தாமதமாக ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான விஷயங்களை தெரிவித்ததாகவும், இப்போது கூட நேரா ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக வேண்டியுள்ளது என்று விளக்கம் அளித்தார் PTR தியாயகராஜன், இதற்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல நேரமிருக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்குபெற தமிழக நிதியமைச்சருக்கு நேரமில்லையா.? என வலைதளவாசிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பேசியதை, சிலர் எனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்குபெற இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அவரை கிண்டல் செய்யும் நோக்கில் பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த தகவலை பகிர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளரும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி இது நெசமாவா கோபால்.? என பதிவு செய்திருந்தார், இதற்கு ஒரு பொறுப்பான மாநில நிதியமைச்சர், இந்த தகவல் பொய்யானது என விளக்கம் கொடுத்திருக்கலாம் அல்லது தன்னை கிண்டல் செய்யும் நோக்கில் கூட பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கடந்து சென்று இருக்கலாம் , ஆனால் அவர் தனது பதில் பதிவில், வடிகட்டிய முட்டாள்தனம் என்றும்,
மேலும், கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில், எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும், பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என பொது தளத்தில் ஒரு பெண் என்று கூட பாராமல் மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என பெண் என்று கூட பாராமல், கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு அவர் அநாகரிகமாக பதிலளித்துள்ள சம்பவம் மீண்டும் பழனிவேல் தியாகராஜனை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.