தமிழக நலனில் அக்கறையில்லாத PTR தியாகராஜன்.! அரசியல் நாகரிகத்தை திமுக மூத்த அமைச்சர்களிடம் இருந்து கற்று கொள்வாரா PTR.?

0
Follow on Google News

கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி, மகாகவி சுப்ரமணிய பாரதி நினைவு நாள் அன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார், அடுத்தநாள் செப் 12ம் தேதி காலை மதுரையில் இருந்து தூத்துக்குடியில் உள்ள பாரதியார் வாழ்ந்த எட்டையாபுரம் இல்லத்துக்கு சென்ற மத்திய நிதியமைச்சர் அங்கே பாரதியார் சிலைக்கு மரியாதை செய்தார்.

பின்பு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 100-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி வ உ சி கல்லூரி வளாகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர், மேலும் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்த மத்திய நிதியமைச்சர் செப் 12ம் தேதி மாலை மீண்டும் மதுரை திருப்பியவர் அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக தென் தமிழகம் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து மாநில நிதி நிலவரம் குறித்து ஆலோசித்து தீர்வு காண வேண்டிய இடத்தில் இருக்கும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை நிமித்தமாக கூட மத்திய நிதியமைச்சர் அவர்களை சந்திக்காமல் புறக்கணித்துள்ள சம்பவம் தமிழக நலனில் பழனிவேல் தியாகராஜனுக்கு அக்கறையின்மை காட்டுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

திமுக – பாஜக இடையே அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக இருந்த போது , அவருடைய கோபாலபுரம் இல்லத்துக்கே சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி, டெல்லிக்கு அழைத்து சென்று நான் சிகிச்சை அளித்து பத்திரமாக பார்த்து கொள்கிறேன் என பிரதமர் சொன்னதாக தற்போதையா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது இது தான் இந்தியா பண்பாடு.

ஆனால் விருந்தோம்பலின் மாண்பையும் பெருமையையும் பறைசாற்றுகின்ற தமிழகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்ராமன் அவர்களை சந்திக்காமல் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புறக்கணித்துள்ள சம்பவம். அவர் இதற்கு முன்பு சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த மேற்கத்திய கலச்சாரத்தில் இருந்து இன்னும் தமிழக அரசியல் பண்பாட்டுக்கு மாறவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் திமுகவின் மூத்த அரசியல் தலைவர் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மதுரை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ள நிலையில். வெளிநாடுகளில் மேற்கத்திய வாழ்க்கை வாழ்ந்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் அரசியல் நாகரிகம் மற்றும் தமிழர்களின் விருந்தோம்பல் பற்றி கற்று கொள்ள வேண்டிய விஷயம் அதிகம் உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.