கடந்த இரண்டு தினகளுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ராமசாமி என்பவர் கொரோன தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சுமார் 12 நாள் சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் வரை அவரது மகள் ஜாஸ்மின் கட்டணம் செலுத்தியுள்ளார், இந்நிலையில் தொடர்ந்து 12 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இராமசாமி உயிர் இழந்தார்.
இந்நிலையில் மேலும் மூன்று லட்சம் பணம் கொடுத்தால் தான் உடலை ஒப்படைக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது, இதனை தொடர்ந்து மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டிய இறந்த ராமசாமி மகள் ஜாஸ்மின், அவரின் தந்தை உடலை வாங்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி பல தனியார் மருத்துவமனைகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கொரோனா நோய் தொற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த உடலை உரியவர்களிடம் கொடுப்பதற்கு பல லட்சங்கள் பெற்றுவிட்டு கொடுக்கும் அவலங்களும் ஏற்பட்டு வருகிறது.
தமிழக அரசு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர்.