நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைமைகள் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதைவிட பிரம்மாண்டமாக அதிமுக கூட்டணி கட்சியான பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் பிரதமர் மோடி.
அங்கு பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார். ஒரே மேடையில் மோடியுடன் முதல்வர் எடப்பாடி, ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவரும், தாராபுரம் பாஜக வேட்பாளருமான எல். முருகன் மற்றும் மேலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகையை முன்னிட்டு தாராபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தாராபுரம் பிரச்சாரத்திற்கு பிறகு ஏப்ரல் 2-ஆம் தேதி மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் பிரதமர் மோடி. அங்கு பிரதமர் மோடி இறங்குவதற்கு ஹெலிபேட் பிரமாண்ட மேடை, பலத்த பாதுகாப்பு போன்றவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தாராபுரத்தில் நாளை பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவி பார்வையிட்டார். நாளை நடைபெற இருக்கும் பிரம்மாண்ட பிரச்சார கூட்டம் தமிழக மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.