கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், பாஜக நடத்தும் வேல் யாத்திரையை கடுமையாக விமர்சனம் செய்தும், மேலும் உலகம் தற்போது பிசாசு கையில் சென்று கொண்டிருப்பதாக பேசியவர், மேலும் வேல் யாத்திரை நடத்தும் பாஜக தலைவர் எல்.முருகன் பன்றி பயல் என்று பேசியது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது, இதனை தொடர்ந்து எல்.முருகனை கொச்சையாக பேசிய பாதிரியாரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது.
இது குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் இராம.இரவிக்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் முனைவர் எல்.முருகன் அவர்கள் வெற்றிகரமாக “வேல் யாத்திரை” அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று அடையசெயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை எல்லாம் தவிடுபொடியாக்கி களம் கண்டு கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கண்டு பொறுத்துக் கொள்ளாத கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசும் பேச்சு ஏற்புடையது அல்ல.
இயேசு குறித்து பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு எல் முருகன் குறித்து அவதூறாக “எல்.முருகன் என்பவன் பன்றி பயல் “வெற்றிவேல் வீரவேல் என்று வேல் யாத்திரை நடத்துகிறான். என்று பேசுகிறார். இந்த கிறிஸ்தவ மத போதகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கையை முன்வைக்கிறோம் என இராம. இரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்.முருகன் பாஜக மாநில தலைவராக வந்த பின்பு தான் தலித் சமூக மக்களை இழிவு படுத்தியதாக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர்.எஸ்.பாரதி மீது கைது நடவடிக்கை வரை சென்றது, இந்நிலையில் தற்போது எல்.முருகனை நேரடியாக கொச்சை படுத்தி பேசிய மத போதகர் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.