ஆண்களை மயக்கி பணம் பறித்த திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவி மீது போலீஸ் புகார்.! ஆண்களே உசார்…

0
Follow on Google News

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலச்சந்தர், சென்னை வடபழனி, மும்பை மற்றும் துபாயில் குளோபல் டச் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் 2015ல் மனைவி இறந்துவிட்டார், குழந்தைகள் மாமனார் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடபழனியில் உள்ள அவரது நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் மயூர்வர்ஷினி என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இவர் பாலசந்தரிடம் தனது பெயர் மயூர்வர்ஷினி என்றும் சொந்த ஊர் பெங்களூர், தனக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார். பெற்றோர் இறந்து விட்டதாகவும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பாலசந்தரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மயூர் வர்ஷினி கூறியதை நம்பி நட்பாக பழகி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார் பாலச்சந்தர். இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து 5 சவரன் நகையை நைசாக வாங்கியுள்ளார் மயூர்வர்ஷினி.

அதன்பின் மயூர்வர்ஷினியின் உண்மையான பெயர் செந்தாமரை என பாலச்சந்தருக்கு தெரியவந்துள்ளது. மேலும் செந்தாமரை க்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வழங்கி வந்துள்ளார் பாலச்சந்தர், தொடர்ந்து பாலச்சந்தர் நெருக்கமாகப் பழகியதை பயன்படுத்தி அவரது கிரெடிட் கார்டில் இருந்து அதிக தொகையை எடுத்து செலவு செய்து வந்துள்ளார் செந்தாமரை, முடக்கி வைக்கப்பட்டிருந்த செந்தாமரை பாஸ்போர்ட்டை சுமார் 1.30 லட்சம் செலவு செய்து அந்த பாஸ்போர்ட்டை மீட்டும் கொடுத்துள்ளார் தொழிலதிபர் பாலச்சந்தர்.

செந்தாமரை மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த பாலச்சந்தர் ஷாக் ஆனார். இதற்கிடையே சென்னை புளியந்தோப்பு எஸ் ஐ சந்தோஷ் குமார் என்பவர் மீது நகை மற்றும் திருமண மோசடி புகார் அளித்த புகார் மனு செந்தாமரை இடம் இருந்ததை கண்டுபிடித்து பாலச்சந்தர் இதுபற்றி கேட்டபோது, செந்தாமரை எந்த பதிலும் தரவில்லை, இதனைத் தொடர்ந்து எஸ்.ஐ சந்தோஷ் குமாரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார் பாலச்சந்தர்,

அப்போது செந்தாமரையின் வயது 44 என்று அவர் ஈரோடு மாவட்டம் கலிங்கராயன்பாளையம் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு சதாசிவம் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர் என்பதைஎஸ்.ஐ.சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார், மேலும் திமுகவைச் சேர்ந்த செந்தாமரை பஞ்சாயத்து தலைவியாக இருந்துள்ளார் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு பல ஆண்களை மயக்கி திருமண ஆசை காட்டி நகை பணம் பறித்து வந்தது தெரிவித்த சந்தோஷ்குமார்

செந்தாமரையால் காவல் துறையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார், இதேபோல் துபாயில் ராஜதுரை என்பவரை மயக்கி பணம் பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது, இந்நிலையில் பாலசந்தர் அளித்த போலீஸ் புகாரில் 10 லட்சம் ரூபாய் 5 சவரன் நகையை தன்னிடம் செந்தாமரை பறித்து உள்ளார்.திருமண ஆசை காட்டி ஆண்களை மயக்கி பணம் நகை பறிக்கும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார் பாலச்சந்தர்.